முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வளர்ந்த இந்தியாவை உருவாக்க புதிய கல்விக்கொள்கை: அமித்ஷா

ஞாயிற்றுக்கிழமை, 14 ஜூலை 2024      இந்தியா
Amit-Shah 2023-11-26

Source: provided

போபால் : வளர்ந்த இந்தியாவை கட்டியெழுப்ப மோடி அரசு, புதிய கல்விக்கொள்கையை கொண்டு வந்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றில் அமித்ஷா பேசியதாவது: 

இந்தூர் அதன் தூய்மை, சுவை மற்றும் நல்ல நிர்வாகத்திற்கு பெயர் பெற்றது. தற்போது முதல் இந்தூர் பசுமை நகரம் என்று அழைக்கப்படும். சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு, நமது இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னணியில் இருக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் கனவு.

வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்ப மோடி அரசு புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்துள்ளது. மாணவர்களை நமது பண்டைய கலாசாரத்துடன் இணைக்கும். புதிய கல்விக் கொள்கை நாட்டிலேயே முதன்முறையாக மத்தியப் பிரதேசத்தில் அமல்படுத்தப்பட்டு உள்ளது. 

இந்த முக்கியமான நடவடிக்கைக்காக, மத்தியப் பிரதேச அரசை நான் வாழ்த்த விரும்புகிறேன். இந்த மாநிலத்தில் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கான பாடத் திட்டம் இந்தியில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மும்பையை நாட்டின் பொருளாதார தலைநகரம் என்று அழைக்கிறோம். அதே போல் இந்தூர் மத்திய பிரதேசத்தின் பொருளாதார தலைநகரம். கல்வி மையமாக இந்தூர் வேகமாக முன்னேறி வருவது மகிழ்ச்சியான விஷயம். 

மத்தியப்பிரதேச மாணவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைய எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அமித்ஷா கூறினார்.

முன்னதாக, மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள அனுமான் கோவிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருடன் ம.பி. முதல்வர் மோகன் யாதவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து