Idhayam Matrimony

கர்நாடக சட்டசபையில் புதிய மைசூரு வாயில் : முதல்வர் சித்தராமையா இன்று திறந்து வைக்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஜூலை 2024      இந்தியா
Siddaramaia 2024-07-14

Source: provided

 பெங்களூரு : கர்நாடக சட்டசபை நுழைவு வாயிலில் மைசூரு வாயில் என்ற கலை நயத்துடன் கூடிய புதிய வாயில் அமைக்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் சித்தராமையா இன்று  திறந்து வைக்கிறார்.

இந்தியாவில் உள்ள தலைமை செயலகங்களில், கர்நாடக தலைமை செயலகமான விதான் சவுதாவுக்கு தனி மவுசு உண்டு. அதன் கட்டிட கலை, கம்பீர தோற்றம் பார்ப்போரின் மனதை கொள்ளை கொள்ளும். பெங்களூரின் அடையாளமாகவும் திகழ்கிறது.

பல்வேறு வெளி நாடுகளின் முக்கிய பிரமுகர்களும், நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பிரமுகர்களும் விதான் சவுதாவின் கலை நயத்தை பார்த்து வியந்தது உண்டு.  தற்போது அதற்கு மேலும் மெருகூட்டும் வகையில், மைசூரு வாயில் என்று சட்டசபை வளாகத்துக்கு செல்லும் பகுதியில் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.

கதவுகளை ரோஸ் வுட் எனும் கருங்காலி மரத்தில், 15 அடி உயரம், 16 அடி அகலத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. அதுவும் மைசூரு அரண்மனையின் தர்பார் அரங்கத்தின் நுழைவு வாயிலில் இருக்கும் கதவுகளை போன்று மிகவும் கலை நயத்துடன் அமைக்கப்பட்டுள்ளன.

கதவுகளின் கைப்பிடிகளுக்கு தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. மொத்தம் மூன்று கதவுகள் உள்ளன. நுழைவு வாயிலின் மேல் பகுதியில், கர்நாடக அரசின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் நடுவில் கடிகாரம் பொருத்தப்பட்டுள்ளது.

சட்டசபை சபாநாயகர் காதர் அறிவுறுத்தலின்படி, மைசூரை சேர்ந்த கிஜர் அலி கான் என்ற கலைஞர் வடிவமைத்துள்ளார். இதை, முதல்வர் சித்தராமையா இன்று காலை சட்டசபை கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன், திறந்து வைக்கிறார். இதற்கு முன், இப்பகுதியில் சாதாரண இரும்பு கேட் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து