முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி-20 தொடரை கைப்பற்றுமா இந்தியா? - இன்று கடைசி போட்டியில் பலப்பரீட்சை

வெள்ளிக்கிழமை, 7 நவம்பர் 2025      விளையாட்டு
INDIA 2024-06-21

Source: provided

பிரிஸ்பேன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரை கைப்பற்றுமா இந்திய அணி கைப்பற்றுமா என்ற ஆவல் எழுந்துள்ள நிலையில் இன்று பிரிஸ்பேனில் நடைபெறவுள்ள கடைசி  போட்டியில் இரு அணிகளும் மோதவுள்ளன. இந்த போட்டியில் வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் சூர்யகுமார் தலைமையிலான இளம் இந்திய அணி உள்ளது.

முன்னிலையில்... 

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுபயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகின்றன. இதில் முதல் போட்டி மழையால் ரத்து ஆனது. 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவும், 3-வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. 4-வது போட்டியில் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

கடைசி போட்டி...

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பிரிஸ்பேனில் நடக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இன்று மதியம் 1.45 மணிக்கு தொடங்குகிறது. இன்றைய ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் அபிஷேக் சர்மா, சுப்மன் கில், திலக் வர்மா ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

நம்பிக்கையுடன்...

ஆல்-ரவுண்டர்கள் வரிசையில் ஷிவம் துபே, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். பந்துவீச்சில் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் உள்ளனர். கடந்த 2 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளதால் இன்றைய ஆட்டத்தில் நம்பிக்கையுடன் களம் இறங்கும். இப்போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா உள்ளது.

ஆஸி., முயற்சிக்கும்...

மிட்செல் மார்ஷ் தலை மையிலான ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ ஷார்ட், டிம் டேவிட், இங்லிஸ், ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல், ஆடம் ஜம்பா, நாதன் எல்லிஸ் ஆகிய வீரர்கள் உள்ளனர். அந்த அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முயற்சிக்கும். இதனால் இப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து