முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்துறை செயலராக தீரஜ் குமார் நியமனம்: தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் : 10 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள்

செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2024      தமிழகம்
TN 2023-04-06

Source: provided

சென்னை : உள்துறை செயலராக இருந்த பி.அமுதா உட்பட தமிழகம் முழுவதும் நேற்று ஒரேநாளில் 50க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உள்துறைச் செயலராக தீரஜ் குமார் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளி கல்வித்துறை செயலராக எஸ்.மதுமதி, சென்னை மாநகராட்சி ஆணையராக ஜெ.குமரகுருபரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ராமநாதபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது.,

சிட்கோ மேலாண் இயக்குனராக இருந்த எஸ்.மதுமதி, பள்ளிக் கல்வித் துறை செயலராகவும், அப்பதவியில் இருந்த ஜெ.குமரகுருபரன் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ஜெ.ராதாகிருஷ்ணன், உணவு மற்றும் கூட்டுறவுத் துறை செயலராகவும், அப்பதவியில் இருந்த கே.கோபால் கால்நடை பராமரிப்பு, பால் மற்றும் மீன்வளத்துறை செயலராகவும், உணவுப் பொருள் வழங்கல் ஆணையர் ஹர்சகாய் மீனா, சிறப்பு முயற்சிகள் துறை செயலராகவும், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் கே.வீரராகவராவ் தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொழிலாளர், திறன்மேம்பாட்டுத்துறை செயலராக இருந்த குமார் ஜயந்த், தகவல் தொழில்நுட்பத் துறை செயலராகவும், அப்பதவியில் இருந்த தீரஜ்குமார் உள்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை செயலராகவும், அப்பதவியில் இருந்த பி.அமுதா வருவாய்த் துறை செயலராகவும், அப்பதவியில் இருந்த வி.ராஜாராமன் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு காதி கிராம தொழில்கள் வாரிய தலைமை செயல் அதிகாரி எஸ்.சுரேஷ்குமார், பிசி, எம்பிசி, சிறுபான்மையினர் நலத்துறை கூடுதல் செயலராகவும், திருவண்ணாமலை டிஆர்டிஏ திட்ட அதிகாரி சி.ஏ.ரிஷப், நிதித்துறை துணை செயலராகவும், ராமநாதபுரம் ஆட்சியர் பி.விஷ்ணு சந்திரன் பொதுத்துறை துணை செயலராகவும், ராணிப்பேட்டை ஆட்சியர் எஸ்.வளர்மதி சமூக நலத்துறை இணை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். எஸ்.வளர்மதி, தமிழ்நாடு பணிபுரியும் பெண்கள் விடுதி கழகத்தின் மேலாண் இயக்குனராகவும் இருப்பார்.

அரியலூர் ஆட்சியர் ஜெ.ஆனி மேரி ஸ்வர்ணா உள்துறை இணை செயலராகவும், கள்ளக்குறிச்சி முன்னாள் ஆட்சியர் ஸ்ரவண் குமார் ஜடாவத், வீட்டுவசதித்துறை இணை செயலராகவும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் இயக்குனர் ஜெ.யு.சந்திரகலா ராணிப்பேட்டை கலெக்டராகவும், நீலகிரி ஆட்சியர் எம்.அருணா புதுக்கோட்டை கலெக்டராகவும், ஈரோடு வணிகவரி இணை ஆணையர் லட்சுமி பவ்யா தண்ணீரு நீலகிரி கலெக்டராகவும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழக முன்னாள் செயல் இயக்குனர் பி.பிரியங்கா தஞ்சாவூர் கலெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிப்காட் செயல் இயக்குனர் பி.ஆகாஷ் நாகப்பட்டினம் கலெக்டராகவும், சென்னை வணிகவரி நிர்வாகப்பிரிவு இணை ஆணையர் பி.ரத்தினசாமி அரியலூர் கலெக்டராகவும், நிதித்துறை துணை செயலர் சிபி ஆதித்ய செந்தில்குமார் கடலூர் கலெக்டராகவும், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் ஆர்.அழகுமீனா கன்னியாகுமரி கலெக்டராகவும், தொழில் மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் ஆணையர் கிரேஸ் லால்ரிண்டிகி பச்சாவ் பெரம்பலூர் கலெக்டராகவும், நகராட்சி நிர்வாக கூடுதல் ஆணையர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் ராமநாதபுரம் கலெக்டராகவும், ஈரோடு டிஆர்டிஏ திட்ட இயக்குனர் நர்னவரே மணீஷ் சங்கர்ராவ் ஈரோடு மாநகராட்சி ஆணையராகவும், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் ஜெ.விஜயா ராணி சென்னை மாநகராட்சி கல்விப்பிரிவு இணை ஆணையராகவும், சேலம் மாநகராட்சி ஆணையர் எஸ்.பாலச்சந்தர், தாம்பரம் மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

10 மாவட்டங்களுக்கு கலெக்டர்கள் நியமனம்

1) ராணிப்பேட்டை கலெக்டராக டாக்டர் ஜெ யு சந்திரகலா.

2) புதுக்கோட்டை கலெக்டராக எம். அருணா.

3) நீலகிரி கலெக்டராக லக்‌ஷ்மி பாவ்யா டன்னீரு.

4) தஞ்சாவூர் கலெக்டராக பி. பிரியங்கா.

5) நாகப்பட்டினம் கலெக்டராக பி. ஆகாஷ்.

6) அரியலூர் கலெக்டராக பி. ரத்தினசாமி.

7) கடலூர் கலெக்டராக சிபி ஆதித்ய செந்தில் குமார்.

8) கன்னியாகுமரி கலெக்டராக ஆர். அழகுமீனா.

9) பெரம்பலூர் கலெக்டராக கிரேஸ் லால்ரிண்டிகி பச்சாவ்.

10) ராமநாதபுரம் கலெக்டராக சிம்ரன்ஜீத் சிங்கலோன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து