முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்வையாளர்களுக்கு இலவசம்

செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2024      விளையாட்டு
Sri-Lanka-1 2023-11-06

Source: provided

மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூலை 19 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம் மற்றும் மலேசியா ஆகிய 8 அணிகள் கலந்துகொண்டு விளையாடவுள்ளன. அனைத்துப் போட்டிகளும் ரங்கிரி தம்புல்லா சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளன.

இந்த நிலையில், மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அதன் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: மகளிர் ஆசியக் கோப்பை,2024 தொடங்கவுள்ளது. அனுமதி இலவசம் எனப் பதிவிடப்பட்டுள்ளது இந்திய மகளிரணி அதன் முதல் போட்டியில் வருகிற ஜூலை 19 ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

__________________________________________________________________________________

மன்னிப்பு கோரினார் ஹர்பஜன்

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அண்மையில் இந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்து ஒரு வீடியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அதில் ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் உள்ளிட்டோர் மாற்றுத் திறனாளிகள் போல நடந்து வருவது போல அந்த ரீல்ஸ் வீடியோ எடுக்கப்பட்டிருந்தது. இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே பலரும் ஹர்பஜன் சிங், ரெய்னா உள்ளிட்டோருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். ஹர்பஜன் உடனடியாக அந்த வீடியோவை நீக்கி, மன்னிப்புக் கோர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தொடர்ந்து கண்டனங்கள் எழுந்த நிலையில், தற்போது அந்த வீடியோவை நீக்கியுள்ள ஹர்பஜன் சிங், இந்த விவகாரம் குறித்து மன்னிப்புக் கோரியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இங்கிலாந்தில் நடந்த போட்டியை வென்ற பிறகு நாங்கள் பதிவிட்ட ‘தவ்பா தவ்பா’ பாடல் குறித்து புகார் தெரிவிக்கும் மக்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். யாருடைய மனதையும் புண்படுத்த நாங்கள் விரும்பவில்லை. ஒவ்வொரு தனிமனிதனையும், சமூகத்தையும் நாங்கள் மதிக்கிறோம்.  இன்னும் நாங்கள் தவறு செய்ததாக நினைத்தால், அனைவரிடமும் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

__________________________________________________________________________________

சுமித் நாகல் முன்னேற்றம்

டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை டபிள்யு.டி.ஏ. வெளியிட்டது. இதில் ஒற்றையர் பிரிவில் செக் குடியரசின் கிரெஜ்சிகோவா 32-வது இடத்தில் இருந்து 10-வது இடத்துக்கு முன்னேறினார். நடந்து முடிந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இவர், தனது 2-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.இதற்கு முன் கடந்த ஜனவரி மாதம் வெளியான தரவரிசையில் 'நம்பர்-2' இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதிப் போட்டி வரை சென்ற இத்தாலியின் ஜாஸ்மின் பாவ்லினி 7-வது இடத்தில் இருந்து முதன்முறையாக 5-வது இடத்துக்கு முன்னேறினார். போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ காப், பெலாரசின் அரினா சபலென்கா, கஜகஸ்தானின் எலினா ரிபாகினா ஆகியோர் முதல் 4 இடங்களில் நீடிக்கின்றனர். இதேபோல், ஆண்களுக்கான ஏ.டி.பி. ஒற்றையர் தரவரிசையில் இத்தாலியின் ஜானிக் சின்னர், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், நடப்பு விம்பிள்டன் சாம்பியன் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் முதல் 3 இடங்களை தக்கவைத்துக் கொண்டனர். இந்நிலையில், இந்தியாவின் சுமித் நாகல் 73-வது இடத்தில் இருந்து 68-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். சுமித் நாகல் முதல் 70 இடங்களுக்குள் வருவது இது முதல் முறை ஆகும்.

__________________________________________________________________________________

பிரைன் லாரா புகழாரம்

கிரிக்கெட்டின் ஜாம்பவான் பேட்ஸ்மேன்களாக போற்றப்படுவர்கள் இந்தியாவை சேர்ந்த சச்சின் மற்றும் வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா ஆவர். இந்நிலையில் சச்சின் மற்றும் தன்னை விட வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கார்ல் கூப்பர் சிறந்த பேட்ஸ்மேன் என்று பிரையன் லாரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-   கூப்பர் நான் பார்த்த வீரர்களில் சிறந்தவர். சொல்லப்போனால் நானும் சச்சின் டெண்டுல்கர் கூட அவருடைய திறமையை நெருங்க முடியாது என்று சொல்வேன். கேப்டனாக இல்லாமல் அவருடைய புள்ளி விவரங்களை பார்த்தால் அது வித்தியாசமானதாக இருக்கும். கேப்டனாகவும் கூட பொறுப்புடன் விளையாடிய அவருடைய சராசரி கிட்டத்தட்ட 50 தொடும். இருப்பினும் ஒரு கேப்டனாக மட்டுமே அவர் தனது உண்மையான திறனை நிறைவேற்றினார் என்பது வருத்தமளிக்கிறது.

லார்ட்ஸ் போட்டியில் கூப்பரின் பேட்டிங்கை நான் பார்த்துள்ளேன். அவர் என்ன ஒரு அற்புதமான பிளேயர். அப்போட்டியில் அவர் சீனியர்களை விட அற்புதமாக பேட்டிங் செய்தார். கார்ல் பேட்டிங் செய்யும்போது அதை தேஷ்மண்ட், விவியன் ரிச்சர்ட்ஸ், கோர்டான் க்ரீனிட்ஜ் ஆகியோர் தங்களின் வேலையை விட்டுவிட்டு பார்ப்பார்கள். அந்த வகையில் மிகவும் திறமையான அவர் நாம் எந்தளவுக்கு சிறந்தவர் என்பதை புரிந்து கொள்ளவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து