முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புரி ஜெகநாதர் கோவில் பொக்கிஷ அறை இன்று மீண்டும் திறப்பு

புதன்கிழமை, 17 ஜூலை 2024      ஆன்மிகம்
Puri-Jaganath 2024-07-17

Source: provided

புரி : புரி ஜெகநாதர் கோவில் பொக்கிஷ அறை இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. 

ஒடிசாவின் புரி ஜெகநாதர் கோவிலில், ரத்ன பண்டார் என்ற ரகசிய கருவூல அறையில் கோவிலுக்கு சொந்தமான நகைகள் உள்ளிட்ட பொக்கிஷங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 2 ரகசிய அறைகள் கோவிலில் உள்ளன. இவை கடைசியாக 46 ஆண்டுகளுக்கு முன்பாக 1978-ல் திறக்கப்பட்டன.

தற்போது இந்த ரகசிய கருவூலத்தில் உள்ள நகைகள் உள்ளிட்ட பொருட்களை டிஜிட்டல் ஆவணமாக வகைப்படுத்துவதற்காக திறக்க முடிவு செய்யப்பட்டு, நீதிபதி தலைமையில் 11 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது. 

அந்த குழுவின் முடிவின்படி, கடந்த 14-ம் தேதி கருவூலங்கள் திறக்கப்பட்டன. அதில் இருந்த நகைகள் மதிப்பிடப்பட்டன. சுமார் 120 கிலோவுக்கு மேற்பட்ட தங்க ஆபரணங்களும் மற்றும் ஏராளமான வெள்ளி பொருட்களும் இருப்பதாக அங்குள்ள பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டன. 

இந்த நிலையில் இந்த ஆபரண கருவூலங்கள் இன்று (வியாழக்கிழமை) மீண்டும் திறக்கப்பட உள்ளது. காலை 9.51 மணிக்கு திறக்கப்பட்டு, பகல் 12.15 மணி வரை ஆபரண பொருட்கள் பட்டியலிடப்படும். 

அதற்கு வசதியாக கோவிலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கருவூலத்திற்கு அவை தகுந்த பாதுகாப்புடன் மாற்றப்படுவதாக குழு நிர்வாகம் தெரிவித்துள்ளது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து