முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பையில் 2,200 பணியிடத்திற்கு திரண்ட 25 ஆயிரம் இளைஞர்கள் : நேர்காணலை ரத்து செய்த ஏர் இந்தியா

புதன்கிழமை, 17 ஜூலை 2024      இந்தியா
Air-India 1

Source: provided

மும்பை : மும்பையில் ஏர் இந்தியாவின் 2,200 பணியிடங்களுக்காக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஏர் இந்தியா நிறுவனம் நேர்காணலை ரத்து செய்தது. 

ஏர் இந்தியா நிறுவனங்களின் விமானங்களில் பயணிகளின் உடமைகளை விமானங்களில் ஏற்றி, இறக்கும் பணி மற்றும் உணவுகளை விமானங்களுக்கு எடுத்துச் செல்லும் பணி உள்ளிட்ட சுமை தூக்கும் பணியிடங்களை நிரப்புவதற்காக நேற்று முன்தினம் நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

மொத்தம் 2,216 பணியிடங்களுக்கு மும்பை அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறவிருந்த நிலையில், சுமார் 25,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கடந்த திங்கள்கிழமை இரவு முதல் அலுவலகத்துக்கு வெளியே குவியத் தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

3 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் மாதம் ரூ. 20,000 முதல் 25,000 வரை சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பெருமளவிலான பட்டதாரி இளைஞர்களும் நேர்காணலுக்கு விண்ணப்பங்களுடன் வருகை தந்திருந்தனர். 

ஏர் இந்தியாவின் மும்பை அலுவலகத்துக்கு வெளியே குவிந்திருந்த சுமார் 25,000-க்கும் அதிகமான இளைஞர்கள் நேற்று முன்தினம் காலை முந்தியடித்து நேர்காணலுக்கு நுழைய முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நிலைமை கட்டுப்பாட்டை இழந்த நிலையில், அனைவரையும் விண்ணப்பங்களை மட்டும் கொடுத்து செல்லுமாறும், அதிலிருந்து தேர்வு செய்து நேர்காணலுக்கு அழைப்பதாகவும் ஏர் இந்தியா நிர்வாகம் அறிவித்து நேர்காணலை ரத்து செய்துள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து