எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
வாஷிங்டன் : இத்தனை காலமும், சூரியனை பூமி மிகத் துல்லியமான பாதையில் சுற்றிக்கொண்டிருக்கிறது என்ற ஆச்சரியமான தகவலில் தற்போது ஒரு சின்ன மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் மிக முக்கியமானதாக விளங்கும் பூமி, உண்மையில் சூரியனை சுற்றவில்லையாம்.
இந்த மாற்றத்துக்குக் காரணம், நடுமையம். சூரியக் குடும்பத்தின் மொத்த அமைப்பை எடுத்துக் கொண்டால், அதனை ஒரு விளையாட்டு அரங்கம் போல உருவகப்படுத்திக்கொள்ள வேண்டும். அப்படியானால், அந்த விளையாட்டு அரங்கில் இருக்கும் சூரியனும், பூமியும் ஒரே சமநிலையில், இரண்டுமே சுழற்சியில் இருக்கின்றன. இந்த அடிப்படையில் பார்த்தால், சூரியக் குடும்பத்தின் நடு மையம் என்பது சூரியனை மையமாகக் கொண்டதாக இருக்காது என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
எதுவாகினும், நமது சூரியக் குடும்பத்தில், மிக வலுவான சாம்பியனாக இருப்பது சூரியன்தான். ஆனால், அதற்காக மட்டுமே அதனை நடுநாயகமாக அறிவித்து ராஜாவாக்க முடியாது. சூரியனிலிருந்து வெளியாகும் அதிகப்படியான நிறை, பூமியை அதன்பால் ஈர்க்கிறது, ஆனால், நியூட்டனின் உலக ஈர்ப்புவிசையின் விதிப்படி, சூரியக் குடும்பம், இரு இருவழிப் பாதை போலத்தான் செயல்படுகிறது. எனவே, பூமியும், ஒரு சிறிய வழியில், தனது புவிஈர்ப்பு சக்தியைப் பயன்படுத்தி சூரியனையும் லேசாக இழுக்கிறது.
சூரியனின் ஈர்ப்பு விசையுடன் ஒப்பிடுகையில், பூமியின் ஈர்ப்பு விசையானது குறைவுதான் என்றாலும், நடு மையத்தை அது லேசாக அசைத்தாலும் கூட போதுமே, சூரியக் குடும்பத்தின் மையமாக சூரியன் இருக்கிறது, ஆனால், எப்போதுமே அல்ல என்ற கூற்று எழுந்துள்ளது. இதுபோலவே மிகப்பெரிய கோள்களான ஜூபிடர் மற்றும் சனிக் கோளும் தங்களது ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி நடுநாயகமாக இருக்கும் சூரியனை அவ்வப்போது அதன் பவுண்டரியை விட்டு லேசாக அசைத்துப் பார்க்கத்தான் செய்கின்றனவாம்.
நாசா கொடுக்கும் விளக்கத்தில், கெப்லரின் மூன்றாம் விதி, இரண்டு வெவ்வேறு பொருள்களுக்கு இடையே இருக்கும் நிறையானது, ஒன்றையொன்று இயக்குவதை தொடர்புபடுத்திக் கொள்வதை விளக்குகிறது.
இதனை மேலும் விரிவாகக் கூறும் நாசா, விண்வெளியில் இருக்கும் ஒரு சிறிய நட்சத்திரம் கூட, மற்றொன்றைக் காட்டிலும் அதிக நிறையைக் கொண்டிருக்கலாம், ஆனால், இரண்டுமே, ஒரே மையப் பகுதியை அடிப்படையாக வைத்து சுற்றிக்கொண்டிருக்கலாம். ஆனால், இதில் ஒன்றின் நிறை அல்லது மற்றொன்றை விட எவ்வளவு பெரியது என்பதெல்லாம் கணக்கில் எடுத்துக்கொக்கூடாது, ஒரு நட்சத்திரத்தின் இயக்கமானதை கணக்கிடும்போது அது நடுநாயகமாக சுற்றிக்கொண்டிருந்தால், அதன் அளவிலிருந்து தொலைவில் சுற்றிக்கொண்டிருக்கும் நட்சத்திரங்களின் தூரத்தைக் கணக்கிட வேண்டுமானால் பயன்படலாம்.
சூரியனின் அதிகப்படியான நிறை காரணமாக, அது நடு நாயகமாக சுற்றிக்கொண்டிருக்கிறது, எனவே, அதுவே மையப்புள்ளியாக இருக்காது, மற்ற பெரிய கோள்களின் ஆதிக்கத்தால், சூரியனே அதன் மையப் புள்ளியை விட்டு வெளியே வர நேர்கிறது. எனவே, பூமியின் வட்டப்பாதையானது, மையத்தின் நிறையை பகிர்ந்துகொள்வதால் துல்லியமாக இருக்கிறதே தவிர, அது சூரியனைத்தான் சுற்றிவருகிறது என்று கூற முடியாது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
சூரியனை கிரகங்கள் சுற்றி வருகின்றன என்பது ஒரு எளிய நடை, கோள்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் விஞ்ஞானி டாக்டர் ஜேம்ஸ் ஓ, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், கோள்கள், 'தொழில்நுட்ப ரீதியாக' சூரியனை மட்டும் சுற்றிவரவில்லை, ஏனெனில், அதன் ஈர்ப்பு விசையால்தான் இது நடக்கிறது, குறிப்பாக, ஜூபிடர் போன்ற கோள்கள், விண்வெளியின் ஒரு குறிப்பிட்ட புள்ளியை அடிப்படையாக வைத்தே சுற்றுகின்றன என்று பதிவிட்டுள்ளார்.
சூரியனின் மையப்பகுதியைத்தான் விண்வெளியில் கோள்கள் சுற்றி வருகின்றன என்றால், அது எப்போதாவது தான் நிகழ்கிறது, அதாவது, சூரியக் குடும்பத்தின் மையப் பகுதியாக சூரியனின் மையம், அதன் நிறையை அடிப்படையாக வைத்து எப்போதாவதுதான் இருக்கிறது என்கிறார் விஞ்ஞானி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
15 Feb 2026தஞ்சை, தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய பா.ஜ.க. அரசு முட்டுக்கட்டை போட நினைக்கிறது. நமக்கான நிதியை தர மறுக்கிறது.
-
40 ஆண்டுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
15 Feb 2026சென்னை, 40 ஆண்டுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார
-
தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்பது சந்தேகம்: ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
15 Feb 2026ஈரோட்டு, தினமும் தி.மு.க. காங்கிரஸ் வார்த்தைப்போர் நடக்கிறது என்றும் தி.மு.க.
-
தமிழ்நாட்டில் பிப். 23-ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்
15 Feb 2026சென்னை, தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 23ஆம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
-
அன்பு வழியை போதித்த வள்ளலார் வழியில் ஏழை எளிய மக்களுக்காகவே தி.மு.க. அரசு செயல்படுகிறது அனைத்துலக வள்ளலார் மாநாட்டை துவக்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
15 Feb 2026சென்னை, அன்பு வழியை போதித்த வள்ளலார் வழியில் ஏழை எளிய மக்களுக்காகவே தி.மு.க.
-
தங்கம் விலை சற்று சரிவு
16 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
பொறியியல் கல்லூரி மாணவர்கள் 1,657 பேருக்கு மடிக்கணினிகள் அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கினார்
16 Feb 2026சென்னை, பொறியியல் கல்லூரி மாணவர்கள் 1,657 பேருக்கு மடிக்கணினிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.


