முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்கு உருவாக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு பிரியங்கா வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 18 ஜூலை 2024      இந்தியா
Priyanka-Gandhi 2023-06-08

புது டெல்லி, இளைஞர்களுக்கு கோடிக்கணக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குமாறு பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, 

 சில நாட்களுக்கு முன்பு, மும்பையில் பேசிய பிரதமர் மோடி, கோடிக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளித்து முந்தைய சாதனைகளை முறியடித்து இருப்பதாக கூறினார். தற்போது அதே மும்பையில் ஒருசில காலியிடங்களுக்காக வேலையில்லாத இளைஞர்கள் கூட்டம் பெருமளவு திரண்டு வந்த வீடியோ வைரலாகி உள்ளது. 

அதற்கு முன்பு, குஜராத்தில் 25 காலியிடங்களுக்காக ஒரு ஓட்டலில் 15 லட்சம் இளைஞர்கள் திரண்டு வந்தனர். அதனால் நெரிசல் போன்ற சூழ்நிலை ஏற்பட்டது. இவற்றையெல்லாம் பார்த்தால், முந்தைய சாதனை நிச்சயமாக முறியடிக்கப்பட்டுள்ளது. 

அதாவது, அதீத வேலைவாய்ப்பின்மை என்ற சாதனை முறியடிக்கப்பட்டது. நாடு சரித்திர வேலைவாய்ப்பின்மையை சந்தித்து வருகிறது. எனவே, வெற்று வாக்குறுதிகள் அளிப்பதையும், திசை திருப்புவதையும் நிறுத்தி விட்டு, இளைஞர்களை பற்றி சிந்திக்குமாறு பிரதமர் மோடியை கேட்டுக் கொள்கிறேன். 

 இளைஞர்களுக்கு கோடிக்கணக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குமாறு வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து