Idhayam Matrimony

கன்வார் யாத்திரை விவகாரம்: எதிர்க்கட்சிகளின் தீர்மான நோட்டீஸ்கள் நிராகரிப்பு

திங்கட்கிழமை, 22 ஜூலை 2024      இந்தியா
jagdeepdhankhar-2023-05-05

Source: provided

புதுடெல்லி : கன்வார் யாத்திரை விவகாரம் தொடர்பான எதிர்க்கட்சிகளின் தீர்மான நோட்டீஸ்கள் மாநிலங்களவையில் நிராகரிப்பட்டது.

உத்தர பிரதேசத்தில் கன்வார் யாத்திரை வழித்தடத்தில் உள்ள உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பெயர்கள் கொண்ட பெயர்ப்பலகை வைக்கவேண்டும் என மாநில அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்த விவகாரத்தை பாராளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முடிவு செய்திருந்தனர். இதற்காக மாநிலங்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்திருந்தனர். அதில், நேற்று மாநிலங்களவையில் மற்ற அலுவலகளை ஒத்திவைத்துவிட்டு, உத்தரபிரதேச அரசு பிறப்பித்த உத்தரவு தொடர்பாக விதி 267-ன் கீழ் விவாதிக்கவேண்டும் என கூறியிருந்தனர்.

ஆனால் வழக்கமான அலுவல்களை நிறுத்தி விட்டு விவாதிக்கும் அளவுக்கு இந்த விவகாரம் முக்கியம் இல்லை எனக்கூறி, இந்த நோட்டீஸ்களை அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் நிராகரித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து