முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடசென்னை வளர்ச்சி திட்டத்துக்கு 4,378 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு : அமைச்சர் சேகர்பாபு தகவல்

திங்கட்கிழமை, 22 ஜூலை 2024      தமிழகம்
Sekar-Babu 2023-04-20

Source: provided

சென்னை : ரூ 4,378 கோடி அளவில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்த முதல்வர் ஆணையிட்டுள்ள நிலையில், 208 பணிகளில் 108 பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று செய்தியாளர்களிடம் பேசியதாவது., முதல்வரின் கனவுத் திட்டமான வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பணிகள் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் துறையினுடைய செயலாளர் காகர்லா உஷா, துறையினுடைய உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, ஏனைய பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை சார்ந்த பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகளோடு இன்றைக்கு மேற்கண்ட இடங்களை ஆய்வு செய்தோம்.

அதில் ஒரு 6 ஏக்கர் நிலப்பரப்பில், எந்த வகையிலும் பொதுமக்களுக்கு பயன்படாத வகையில் உள்ள வாட்டர் பேசின் ரோடு என்று சொல்லப்படுகின்ற இந்த தண்ணீர் தொட்டி தெருவிலும், அதேபோல் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை அருகில் அமைந்திருக்கின்ற பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பணிமனை இடங்களையும், அந்த இடங்களை மக்களுடைய எல்லா வகையான பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம் என்ற நல்ல நோக்கத்தோடு இன்றைக்கு ஆய்வினை மேற்கொண்டோம்.

வடசென்னை வளர்ச்சி திட்டத்தை பொறுத்தளவில் முதல்வர் ரூபாய் 4,378 கோடி அளவில் செயல்படுத்த ஆணையிட்டு இருக்கின்றார். அதில் 208 பணிகளில் 108 பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மீதம் 100 பணிகள் மேற்கொள்ளவதற்கான ஆய்வுகள் தொடர்ந்து அந்தந்த துறையின் சார்பில் நடைபெற்று வருகின்றன. இதில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் திட்டப்பணிகள் சுமார் ரூ. 685 கோடி செலவில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமே மேற்கொண்டு இருக்கின்றது. ரூ. 4,378 கோடியில் கிட்டத்தட்ட சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ரூ. 1,619 கோடியை முதல்வர் உத்தரவின் பெயரில் பங்களிப்பாக பல்வேறு துறைகளுக்கு வழங்கி இருக்கின்றது. இந்த திட்டங்கள் நிறைவு பெறுகின்ற பொழுது வடசென்னை மிகப் பெரிய வளர்ச்சி பெறும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து