முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் விரைவில் துவங்கும்: பாராளுமன்றத்தில் மத்திய அரசு உறுதி

வெள்ளிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2024      இந்தியா
Aims 2023-09-28

புதுடெல்லி, மதுரை எய்ம்ஸ் கட்டுமான  பணிகள் விரைவில் துவங்கும் என்று பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற மக்களவையில் இன்று மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விவகாரத்தை திமுக எம்.பி. ஆ.ராசா எழுப்பினார். பட்ஜெட் விவாதத்தில் மதுரை எய்ம்ஸ் பற்றிய ஒரு வார்த்தை கூட குறிப்பிடப்படவில்லை என்பது மிகவும் வேதனையை தருகிறது என்று கூறிய அவர் தொடர்ந்து பேசியதாவது,மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டதோடு சரி, அதற்கு பிறகு கூடுதல் நிதி ஒதுக்கீடு அல்லது மேற்கொண்டு கட்டுமான பணிகளை மேற்கொள்வது போன்ற எந்த பணிகளும் நடத்தப்படவில்லை ஏன்? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா பேசியதாவது, மதுரை எய்ம்ஸ் கட்டப்படுவதற்கு ஏற்பட்டுள்ள காலதாமதத்தை நாங்கள் ஒத்துக்கொள்கிறோம். ஆனால் மிக விரைவில் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கும் என்ற உறுதியையும் கொடுக்கிறேன். தொழில்நுட்ப காரணங்களால் தான் மதுரையின் தாமதம் ஆகிறது என்று விளக்கம் அளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து