முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என் மீது அமலாக்கத்துறையை ஏவி விட மத்திய அரசு திட்டம் ராகுல் காந்தி பதிவு

வெள்ளிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2024      இந்தியா
Rahul-Gandhi-1 2023 03 30

Source: provided

புதுடெல்லி: சக்ரவியூக உரைக்குப் பிறகு தனக்கு எதிராக அமலாக்கத்துறையை ஏவி விட மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

2024-25-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், பாராளுமன்றத்தில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சக்கர வியூகத்தால் நாடெங்கிலும் அச்சம் மிகுந்த சூழ்நிலை நிலவுகிறது; அந்த சக்கர வியூகத்தை ’இன்டியா' கூட்டணி தகர்க்கும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

இதுதொடர்பாக நேற்று ராகுல் வெளியிட்ட எக்ஸ் பதிவில், திறந்த கரங்களுடன் காத்திருப்பதாகவும், உங்களை வரவேற்கிறேன். எனது சக்ரவியூகத்தின் பேச்சு சிலருக்குப் பிடிக்கவில்லை என்றும் கூறினார். இதனால் என் மீது அமலாக்கத்துறையை ஏவி விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக எனக்கு தகவல்கள் வந்திருக்கிறது என்று அவர் பதிவிட்டுள்ளார். இதையடுத்து பாஜக அரசு அரசியல் துன்புறுத்தலுக்காக அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமானவரி போன்ற அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவதாகக் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து