முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காம்ப்ளியின் பரிதாப நிலை

செவ்வாய்க்கிழமை, 6 ஆகஸ்ட் 2024      விளையாட்டு
Vinod-Kambli 2024 08 06

Source: provided

சச்சின் டெண்டுல்கரின் பள்ளித்தோழர், கிரிக்கெட் இணை, முன்னாள் இந்திய இடது கை பேட்டர் வினோத் காம்ப்ளி நடக்க முடியாமல் பிறர் உதவியுடன் கைத்தாங்கலாக அழைத்துச் செல்லப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக, அதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் சச்சின் டெண்டுல்கர் நிச்சயம் உதவி புரிய வேண்டும் என்றும் இன்னும் பலவிதமாகவும் தங்கள் வேதனைகளைப் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோவில் வினோத் காம்ப்ளியால் நிற்கக் கூட முடியவில்லை. நடப்பது அசாத்தியமான நிலையில் மற்றவர்கள் உதவியுடன் கைத்தாங்கலாக அவர் அழைத்து செல்லப்பட்டது ரசிகர்களிடையேயும் கிரிக்கெட் வட்டாரங்களிலும் கடும் வேதனை அலைகளைத் தோற்றுவித்துள்ளது. வினோத் காம்ப்ளியால் பேலன்ஸ் செய்ய முடியவில்லை. கால்கள் பலமிழந்தது போல் உள்ளன. கால்களும் நேராக இல்லை.

பலரும் வினோத் காம்ப்ளியின் போதைப் பழக்கத்தினால் ஏற்பட்ட விளைவு என்று பதிவிட, மற்ற சிலர் சில நாட்களாகவே அவரது உடல்நலம் சீரழிவு கண்டுள்ளது என்று பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களிடையே விவாதங்களையும், கவலைகளையும், அக்கறைகளையும் கிளப்பியுள்ளது. கிரிக்கெட் உலகில் 1990-களில் சச்சின் டெண்டுல்கர் நுழைவையடுத்து வினோத் காம்ப்ளியின் நுழைவும் தூள் கிளப்புவதாக அமைந்தது. அதிரடி இடது கை வீரராக இரண்டு இரட்டைச் சதங்களை அவர் டெஸ்ட் போட்டிகளில் எடுத்தார். 1993-ல் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் வரலாற்று வெற்றியில் இவரது பெயர் உச்சம் பெற்றது. இத்தனைப் பிரமாதமான திறமை இருந்தும் 1996 உலகக் கோப்பை அரையிறுதியில் காலிறுதிப் போட்டியில் ஈடன் கார்டனில் டாஸ் வென்று பேட் செய்வதற்குப் பதிலாக கேப்டன் அசாருதீன் பீல்டிங்கை முதலில் தேர்வு செய்ததையடுத்து இந்திய அணி களத்தில் 120/8 என்று மடிய ரசிகர்கள் உள்ளே புகுந்து கலாட்டாவிலும் ரகளையிலும் ஈடுபட ஆட்டம் கைவிடப்பட்டது.

அப்போது வினோத் காம்ப்ளி அழுதுகொண்டே பெவிலியன் சென்ற காட்சியை யாரும் மறப்பதற்கில்லை. இந்தியா வெளியேறியது. அப்போது இவர் கேப்டன் அசாருதீனை அவரின் அறைக்குச் சென்று கடுமையாக வசையை பொழிந்ததாகவும் செய்திகள் உலாவின. அதன் பிறகே இவரது கரியர் கொஞ்சம் பின்னடைவு கண்டது. பிறகு காயங்கள், சொந்த நடத்தை விவகாரங்கள் ஆகியன ஒரு அற்புதமான உலக பிரசித்தி பெற வேண்டிய வீரரை அழித்து விட்டது. 17 டெஸ்ட் போட்டிகளை மட்டுமே ஆடிய வினோத் காம்ப்ளி 4 சதங்கள் 3 அரைசதங்களுடன் 227 என்ற அதிகபட்ச ஸ்கோருடன் 1084 ரன்களை 54.20 என்ற சராசரியில் எடுத்து ஓய்வு அறிவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது யாருடைய துரதிர்ஷ்டம்?. 104 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 2477 ரன்களை 2 சதங்கள் 14 அரைசதங்களுடன் எடுத்துள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் இவரது சராசரி 59.67.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து