முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற மக்களவையில் வக்ஃப் சட்ட திருத்த மசோதா அறிமுகம் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பால் கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்ப பரிந்துரை

வியாழக்கிழமை, 8 ஆகஸ்ட் 2024      இந்தியா
Parliament 2023 05 27

Source: provided

புதுடெல்லி: வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024 பாராளுமன்ற மக்களவையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பிய எதிர்க்கட்சிகள், மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பாராளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்ப பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு விளக்கம்...

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024-ஐ நேற்று மக்களவையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. வக்ஃப் வாரியங்களில் பெண்களைக் கட்டாயமாகச் சேர்ப்பது உட்பட பொறுப்புக் கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா, மத்திய வக்ஃப் கவுன்சில் மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும். வக்ஃப் சொத்துக்கள் மத்திய அரசு இணையதளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு...

இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. மசோதா தொடர்பாக பேசிய காங்கிரஸ் எம்.பி கே.சி.வேணுகோபால், "இந்த மசோதா கூட்டாட்சி முறை மீதான வலிமையான தாக்குதல். வக்ஃப் சொத்துகள் தொடர்பான தரவுகளை சேகரிக்கும் பணிகளை மாநிலங்கள் கவனித்துக் கொள்கின்றன. இந்த மசோதா அனைத்து தரவுகள் சேகரிக்கும் பணியையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்லும். இது மத சுதந்திரத்தின் மீதான தாக்குதல்" என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

அந்தந்த மதத்தினர்.... 

இந்த மசோதா தொடர்பாக பேசிய சமாஜ்வாதி கட்சி எம்பி மொஹிபுல்லா, "மற்ற மதத்தினரின் சட்டப்பூர்வ அமைப்புகளில் அந்தந்த மதத்தினர் மட்டுமே பிரதிநிதிகளாக இருக்க வேண்டும் எனும்போது, ஏன் முஸ்லிம்கள் இருக்கக் கூடாது. முதல் வக்ஃபு வாரியம் மெக்காவில் உள்ளது. அது குறித்தும் கேள்வி எழுப்புவோமா? இது ஒரு பெரிய தவறு. இதற்கான

கூட்டாட்சிக்கும்...

இந்த மசோதா அரசியல் சாசனத்துக்கு எதிரானது மட்டுமல்ல, கூட்டாட்சி மற்றும் மத சிறுபான்மையினருக்கும் எதிரானது என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். ஒரு இந்து கோயிலை நிர்வகிக்கும் வாரியத்தில் இஸ்லாமியர்களோ அல்லது கிறிஸ்தவர்களோ அங்கம் வகிக்க முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஒரு குறிப்பிட்ட மதத்தை நம்பாத ஒருவருக்கு அந்த மதத்தின் சார்பாக முடிவெடுக்க ஏன் உரிமை இருக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

வெளிப்படைத்தன்மை....

இதற்கு பதில் அளித்துப் பேசிய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் லாலன் சிங், "வழிபாட்டுத் தலங்களுக்கும் சட்டபூர்வ அமைப்புகளுக்கும் வித்தியாசம் உள்ளது. இந்த அவையில் உள்ளவர்கள் வக்ஃப் வாரியங்களை கோயில்களுடன் ஒப்பிடுகிறார்கள். ஆனால், அவை வேறுபட்டவை. இது மசூதிகளை ஒழுங்குபடுத்தும் முயற்சி அல்ல. வக்ஃப் வாரியங்கள் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட அமைப்புகள். இந்தத் திருத்தம் அதில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று கூறினார்.

மீறுவதாகக் உள்ளது... 

பாராளுமன்ற விவகாரத் துறை மற்றும் மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்ததாவது., இந்த மசோதா பாராளுமன்றத்தில்தான் பகிரப்பட்டது என்றார். ஆனால், சுப்ரியா சுலே, பாராளுமன்றத்துக்கு முன்பாக ஊடகங்களில் வெளிவந்துவிட்டது என குறிப்பிட்டார். சச்சார் கமிட்டி பரிந்துரைகளின் அடிப்படையிலேயே வக்ஃப் சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டிருப்பதாகவும், மத சுதந்திரத்தில் தலையிடும் நோக்கம் இதில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். 

பரீசிலனைக்கு அனுப்ப... 

மேலும் இதற்கு தனிப்பட்ட முறையில் இஸ்லாமிய எம்.பி.க்களே ஆதரவு அளிப்பதாகவும் கூறினார்.  பின்னர், எதிர்க்கட்சியினரின் கோரிக்கைப்படி, மசோதாவை பாராளுமன்ற கூட்டுக் குழு பரீசிலனைக்கு அனுப்பிவைக்கப்படும் என்றார்.  முன்னதாக தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சிவசேனா ஷிண்டே பிரிவு எம்.பி.க்கள் வக்ஃபு வாரிய சட்டத்திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து