முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் வன்முறை: மணிப்பூர் முதல்வர் கவர்னருடன் சந்திப்பு

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2024      இந்தியா
Brian-Singh 2024-09-08

Source: provided

இம்பால் : மணிப்பூரில் மீண்டும் ஏற்பட்டுள்ள வன்முறை சம்பவங்களை தொடர்ந்து அம்மாநில முதல்வர் பிரேன்சிங், 20 எம்.எல்.ஏ.க்களுடன் கவர்னர் லட்சுமன் ஆச்சார்யாவை  நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே ஒரு ஆண்டுக்கும் மேலாக மோதல் போக்கு நீடித்து வருகிறது.மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதற்கு குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுவே மோதலுக்கு முக்கியக் காரணமாகும்.

இரு சமூகத்தினரை சார்ந்த பயங்கரவாதிகளும் மாறி மாறி தாக்குதல்களில் ஈடுபடுவதால் உயிர் சேதம் தொடர் கதையானது. இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனா்.

இந்நிலையில், ஜிரிபாம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரு வீட்டுக்குள் புகுந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த ஒருவரை சுட்டுக்கொன்றனர். இந்த பயங்கரவாதிகள் மலைப்பகுதியில் இருந்து வந்தவர்களாவர். 

இதைத் தொடர்ந்து இரு சமூகத்தினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் 3 பயங்கரவாதிகள் உள்பட ஆயுதம் தாங்கிய 5 போ் உயிரிழந்தனர். அங்கு மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மணிப்பூரில் ஏற்பட்ட புதிய கலவரம் தொடர்பாக முதல்வர் பிரேன்சிங் அவசர ஆலோசனை நடத்தினார். சட்டம், ஒழுங்கு நிலவரம் தொடர்பாக அவர் இம்பாலில் உள்ள தனது இல்லத்தில் மாநில அமைச்சர்கள், ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ.க்களுடன் நேற்று முன்தினம் இரவு அவர் ஆலோசனையில் ஈடுபட்டார்.  

அதை தொடர்ந்து முதல்வர் பிரேன்சிங், 20 எம்.எல்.ஏ.க்களுடன் கவர்னர் லட்சுமன் ஆச்சார்யாவை நேற்று காலை 11 மணியளவில் சந்தித்தார். இந்த சந்திப்பு ஒரு  மணி நேரம் நடைபெற்றது. அவர்கள் என்ன விவாதித்தார்கள் என்று தெரியவில்லை. 

ஆளில்லா விமானம், ராக்கெட் தாக்குதலை தொடர்ந்து புதிய வன்முறையில் 5 பேர் கொல்லப்பட்டதால் மணிபூரில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதை தொடர்ந்து நடந்த தேடுதல் வேட்டையில் பெரிய அளவில் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. துப்பாக்கிகள், கைதுப்பாக்கிகள், குண்டுகள், கையெறி குண்டுகள், நீண்ட தூரம் தாக்க கூடிய ராக்கெட் குண்டுகள், வெடி பொருட்கள் உள்ளிட்ட ஆயுதங்களை பாதுகாப்பு படை வீரர்கள் கைப்பற்றி உள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து