முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி., தேர்தல் முடிவு பா.ஜ.க. மீதிருந்த அச்சத்தை நீக்கியது: அமெரிக்காவில் ராகுல்காந்தி பேச்சு

திங்கட்கிழமை, 9 செப்டம்பர் 2024      இந்தியா      உலகம்
Rahul 2024-09-09

டல்லாஸ் (அமெரிக்கா), பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் காரணமாக பா.ஜ.க. மீது, நரேந்திர மோடி இருந்த அச்சம் துடைத்தெறியப்பட்டுவிட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி, டல்லாஸ் நகரில் இந்தியர்கள் மத்தியில் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது., இந்தியா என்பது ஒற்றை கருத்து என்று ஆர்.எஸ்.எஸ் நம்புகிறது. இந்தியா என்பது பல கருத்துக்கள் என்று நாங்கள் நம்புகிறோம். சாதி, மொழி, மதம், பாரம்பரியம் அல்லது வரலாறு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவரும் பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டும், கனவு காண அனுமதிக்கப்பட வேண்டும், அனைவருக்கும் இடம் கொடுக்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். இதுதான் எங்களுக்குள் இருக்கும் முரண்; சண்டை.

நவீன இந்தியாவின் அடித்தளம் அரசியலமைப்பு. இந்தியப் பிரதமர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் தாக்குகிறார் என்பதை இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டபோது, ​​இந்த சண்டை தேர்தலில் எதிரொலித்தது. நான் அரசியல் சாசனத்தை முன்வைத்தபோது, நான் சொல்வதை மக்கள் புரிந்துகொண்டார்கள். பா.ஜ.க. நமது பாரம்பரியத்தை தாக்குகிறது, நமது மொழியை தாக்குகிறது, நமது மாநிலங்களை தாக்குகிறது, நமது வரலாறுகளை தாக்குகிறது என்று அவர்களும் கூறினர்.

தேர்தல் முடிவு வந்த சில நிமிடங்களிலேயே, இந்தியாவில் பா.ஜ.க.வைக் கண்டும், இந்தியப் பிரதமரைக் கண்டும் யாரும் பயப்படவில்லை என்பதை நாம் பார்த்தோம். எனவே இவை மிகப்பெரிய சாதனைகள். இந்த சாதனைக்கு ராகுல்காந்தியோ அல்லது காங்கிரஸ் கட்சியோ காரணம் அல்ல. ஜனநாயகத்தை உணர்ந்த, நமது அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலை நாம் ஏற்கப் போவதில்லை என்பதை உணர்ந்த இந்திய மக்களின் மகத்தான சாதனைகள் இவை. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து