முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைனின் 140-க்கும் மேற்பட்ட டிரோன்களை முறியடித்த ரஷ்யா

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2024      உலகம்
Russia 2024-09-10

மாஸ்கோ, உக்ரைனிலிருந்து ஏவப்பட்ட  140-க்கும் மேற்ப்பட்ட ஆளில்லா விமானங்களை (டிரோன்)  ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது கடந்த 2022-ல் ரஷ்யா போர் தொடுத்தது. இரண்டரை ஆண்டுகளாக நீடிக்கும் இந்த போரில், முக்கிய நகரங்களின் மீது இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே ரஷ்யா மீதான வான்வழி தாக்குதலை உக்ரைன் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில்,  ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மற்றும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியத்தை இலக்காகக் கொண்டு உக்ரைனிலிருந்து ஏவப்பட்ட  140-க்கும் மேற்ப்பட்ட ஆளில்லா விமானங்களை (டிரோன்)  ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. 

போர் தொடங்கிய பிறகு உக்ரைனால் நடத்தப்பட்ட மிகப்பெரிய டிரோன் தாக்குதலில் இது 2-வது ஆகும்.  மாஸ்கோவிற்கு வெளியே ராமென்ஸ்காய் நகரில் இரவு நேரத்தில் உக்ரைனின் 2 டிரோன்கள் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களை தாக்கியதாக மாஸ்கோ பிராந்திய கவர்னர் ஆண்ட்ரி வோரோபியோவ் கூறியுள்ளார்.  இந்த தாக்குதலில் ஒரு பெண், 9 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாகவும் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மாஸ்கோவின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது டிரோன் குப்பைகள் விழுந்ததில் அதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என மேயர் செர்ஜி சோபியான் தெரிவித்துள்ளார். கடந்த 1-ம் தேதி உக்ரைனில் இருந்து ஏவப்பட்ட 158 ஆளில்லா விமானங்களை ஒரே இரவில் ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து