முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஐ.நா. ஊழியர்கள் உள்பட 34 பேர் பலி

வியாழக்கிழமை, 12 செப்டம்பர் 2024      உலகம்
Gaza-2024-09-12

காசா, காசாவின் மத்திய பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஐ.நா. ஊழியர்கள் உட்பட 34 பேர் உயிரிழந்தனர். 

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றனர்.

இதையடுத்து ஹமாஸ் ஆயுதக் குழுவினர் மீது இஸ்ரேல் அரசு போர் அறிவித்தது. இதுவரை ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100-க்கும் மேற்பட்டோரை இஸ்ரேல் மீட்டுள்ளது. தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக அழிக்கும் நோக்கில் காசாவில் உள்ள பல்வேறு பகுதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில் இதுவரை சுமார் 41 ஆயிரத்துக்கு அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், காசாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள நுசிராட்டில் உள்ள பள்ளிக்கூடமாக மாறிய தங்குமிடத்தின் மீது நேற்று முன்தினம் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 6 ஐ.நா. ஊழியர்கள், 19 பெண்கள் உள்பட 34 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு ஐ.நா. தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்ககத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 

காசாவில் நடப்பது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. சுமார் 12,000 பேர் தங்குமிடமாக மாறிய பள்ளிக்கூடத்தின்  மீண்டும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் தாக்கப்பட்டது. கொல்லப்பட்டவர்களில் நமது ஊழியர்கள் 6 பேர் அடங்குவர். சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் இந்த வியத்தகு மீறல்கள் இப்போது நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து