முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த 2 மாதங்களில் 10-வது முறையாக அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்

வெள்ளிக்கிழமை, 13 செப்டம்பர் 2024      தமிழகம்
Anna-University 1

சென்னை, சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்திற்கு கடந்த 2 மாதத்தில் நேற்று 10-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடுமுழுவதும் சமீப காலமாக ரயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களுக்கு மர்ம நபர்களால் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு மின்னஞ்சல் மூலமாக நேற்று மிரட்டல் வந்துள்ளது.

இதனையடுத்து பல்கலைக் கழகத்திற்கு விரைந்த போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் வளாகம் முழுவதும் தீவிர சோதனையிட்டனர். சோதனையில் எந்தப் பொருளும் சிக்காததை அடுத்து வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. 

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 மாதங்களில் மட்டும் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு 10-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

“மிரட்டல் கும்பல் வெளி நாடுகளில் இருந்து இதுபோல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதுவும் ஒரே கும்பல்தான் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருகிறது. அவர்களை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளதால் இது போன்ற மிரட்டல் புரளிகளை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” என சென்னை காவல் ஆணையர் அருண் அறிவுறுத்தி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து