எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கும்பகோணம் : தமிழகத்தில் ரூ. ஒரு லட்சம் கோடியில், 2,781 கி.மீ., தூரத்திற்கு, புதியதாக 71 சாலைகள் அமைக்கும் திட்டம் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளதாக மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் - கும்பகோணம் - விக்ரவாண்டி வரை உள்ள பிரதானச் சாலைகள் குறுகலாகவும், சாலையின் ஓரங்களில் குடியிருப்புகளும் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனை கருத்தில் கொண்டு விழுப்புரம் மாவட்டம், விக்ரவாண்டி முதல் தஞ்சாவூர் வரையிலான 165 கிலோ மீட்டாருக்குத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ், நான்கு வழிச்சாலையாகக் கடந்த 2006-ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டு, கடந்த 2017-ம் ஆண்டு ரூ.3,517 கோடி நிதி ஒதுக்கியது.
இதைத்தொடர்ந்து, கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரலில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ், தனியார் ஒப்பந்தத்தின் மூலம், முதல் பிரிவாக விக்ரவாண்டி சேத்தியாத்தோப்பு வரை 66 கி.மீ தூரத்திற்கும்,. 2-ம் பிரிவாக சேத்தியாதோப்பு முதல் கும்பகோணம்-சோழபுரம் வரை ரூ.2356.19 கோடியில் 50.480 கி.மீ. நீளத்திலும், 3-ம் பிரிவுகளாகச் சோழபுரம் முதல் தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் புளியந்தோப்பு வரை ரூ.2374.69 கோடி மதிப்பீட்டில் 47.835 கி.மீ. நீளத்தில் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டு, சாலை அமைக்கும் பணி தற்போது முடியும் தருவாயில் உள்ளது.
இந்த நிலையில், விக்கிரவாண்டி- சோத்தியாப்தோப்பு வரையிலான சாலைப் பணிகள் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டதால், மீதமுள்ள சேத்தியாத்தோப்பு முதல் தஞ்சாவூர் வரையிலான 2-ம் மற்றும் 3-ம் கட்டப் சாலைப் பணிகளை, மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, கார் மூலம் புறவழிச்சாலையை ஆய்வு மேற்கொண்டவர், மூப்பக்கோயில் புறவழிச்சாலையில் அமைக்கப்பட்டிருந்த அதன் வரைபடத்தைப் பார்வையிட்ட பின், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ''தஞ்சாவூர் – விக்கரவாண்டி நான்கு வழிச்சாலை ரூ. 4,730 கோடி மதிப்பீட்டில், 164 கி.மீ.தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர்–சோழபுரம், சோழபுரம்– சேத்தியாதோப்பு வரையிலான சாலைப் பணிகள் 95 சதவீத நிறைவு பெற்றுள்ளது.
மொத்த திட்டத்தில் நில கையகப்படுத்துவதில், சிக்கல்கள் மற்றும் முக்கிய சுணக்கமாக இருந்ததால், ஒப்பந்தக்காரர்களால் இந்த சாலைப் பணியை முடிப்பதில் சிக்கல் உள்ளதாக, பணியை செய்ய முடியாத எனக் கூறி என்னை சந்தித்தனர். மேலும், சாலை அமைப்பதற்கான கட்டுமான மூல பொருட்கள் கிடைப்பதில் சில சிக்கல் இருந்தது. இது போன்ற கடினமான சூழலிலும் பணிகள் முடிந்துள்ளது.
தற்போது, தேசிய நெடுஞ்சாலை மூலம் 10 புதிய சாலைகள் அமைப்பதற்காகத் திட்டம் 727 கி.மீ.தூரத்திற்கு ரூ. 20 ஆயிரம் கோடி மதிப்பில், கோவை – சத்தியமங்கலம், தூத்துக்குடி – கன்னியாகுமரி, ராமநாதபுரம் – ராமேஸ்வரம், ராமேஸ்வரம் – அரிச்சல்முனை, மதுரை – ராமேஸ்வரம், மங்களூர் – விழுப்புரம், மதுரை – தொண்டி, சேலம் – வாணியம்பாடி, மதுரை – தேனி உள்பட 10 ஊர்களுக்கு இடையில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ரூ. ஒரு லட்சம் கோடியில், 2,781 கி.மீ., தூரத்திற்கு, புதியதாக 71 சாலைகள் அமைக்கும் திட்டம் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதே போல், 1,343 கி.மீ. தூரத்திற்கு. 68 சாலைத் திட்டங்கள் மூலம் ரூ. 60 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், தமிழகத்தில் 2014-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை 451 பல்வேறு சாலைத் திட்டங்கள் 9,300 கி.மீ. தூரத்திற்கு ரூ. 2 லட்சம் கோடி மதிப்பில், தமிழகம் முழுவதும் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, அதிகமான முக்கியத்தும் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வருவதுடன், தமிழக அரசும் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. 2014-ம் ஆண்டுக்கு முன்பாக தேசிய நெடுஞ்சாலை 4,975 சாலைகள் இருந்தது. 2014ம் ஆண்டுக்குப் பிறகு 6,806 சாலையாக உயர்ந்துள்ளது.
நாடுமுழுவதும் 5 லட்சம் கோடியில் மதிப்பீட்டில், 10 ஆயிரம் கி.மீ.தூரத்திற்கு 27 புதிய பசுமை வழிச் சாலை அமைய உள்ளது. தமிழகத்தில் 3 பசுமை வழிச்சாலை, 187 கி.மீ., நீளத்தில் ரூ.10 ஆயிரத்து 100 கோடி செலவில் அமைய உள்ளது எனத்தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 weeks 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 weeks 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-10-2024
15 Oct 2024 -
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை : பொதுத்துறை நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிப்பு
15 Oct 2024சென்னை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ள
-
தமிழகத்தில் 21-ம் தேதி வரை மழை தொடரும்: வானிலை மையம் தகவல்
15 Oct 2024சென்னை, தமிழகத்தில் வரும் 21-ம் தேதி வரை மழை தொடரும் என சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.
-
கேரள கடற்கரை பகுதிகளுக்கு இன்று இரவு வரை ரெட் அலர்ட்: மீனவர்களுக்கு வானிலை மையம் அறிவுறுத்தல்
15 Oct 2024திருவனந்தபுரம், கேரள கடலோர பகுதிகளில் இன்று புதன்கிழமை இரவு 11.30 மணி வரை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
பருவமழையின் தாக்கத்தில் இருந்து மக்களைக் காப்போம்: துணை முதல்வர் உதயநிதி அறிவுறுத்தல்
15 Oct 2024சென்னை, பருவமழையின் தாக்கத்தில் இருந்து மக்களைக் காப்போம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
-
வயநாடு பார்லி. தொகுதிக்கு நவ. 13-ல் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
15 Oct 2024புது டெல்லி, பிரியங்கா காந்தி போட்டியிடும் வயநாடு பாராளுமன்ற தொகுதிக்கு நவம்பர் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
மழை மீட்பு பணி: காவல் கட்டுப்பாட்டு அறையில் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நேரில் ஆய்வு
15 Oct 2024சென்னை, மழை மீட்பு பணிக்காக அமைக்கப்பட்ட காவல் சிறப்புக் கட்டுப்பாட்டு அறையை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
-
தூய்மைப் பணியாளர்களுடன் எப்போதும் முன்கள வீரனாக துணை நிற்பேன்: முதல்வர் மு.க. ஸ்டாலின்
15 Oct 2024சென்னை, தூய்மை பணியாளர்களுடன் எப்போதும் முன்கள வீரனாக துணை நிற்பேன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கனடாவுக்கான இந்திய துாதரை வாபஸ் பெற மத்திய அரசு முடிவு
15 Oct 2024புது டெல்லி, கனடாவில் உள்ள இந்திய தூதரை திரும்பப் பெறுவது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் அங்குள்ள துாதரக அதிகாரிகளும் திரும்பப் பெறப்படுகின்றனர்
-
தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: 6 குழந்தைகள் உள்பட 15 பேர் பலி
15 Oct 2024காசா, காசாவின் தெற்கு பகுதியில் உள்ள பெனி சுஹைலா நகரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 6 குழந்தைகள், 2 பெண்கள் உள்பட மொத்தம் 15 பேர் உயிரிழந்ததாக தெரிவ
-
கனமழை தொடர்பாக பெறப்பட்ட 249 புகார்களில் 215-க்கு தீர்வு காணப்பட்டுள்ளது: தமிழக அரசு
15 Oct 2024சென்னை, கனமழை தொடர்பாக மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் பெறப்பட்ட 249 புகார்களில் 215 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்றும், சென்னையில் 300 நிவாரண மையங்களும்,
-
சந்திக ஹதுருசிங்க சஸ்பெண்ட்
15 Oct 2024வங்காளதேச கிரிக்கெட் அணி சமீபத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது.
-
கேரளாவின் கண்ணனூர் மாவட்ட துணை கலெக்டர் தற்கொலை
15 Oct 2024திருவனந்தபுரம், கேரளாவின் கண்ணனூர் மாவட்ட துணை கலெக்டர் நவீன் பாபு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
-
பத்திரிகை சுதந்திரத்தை காக்க போராடியவர்: மறைந்த தினபூமி நாளிதழின் ஆசிரியருக்கு டி.யு.ஜே. புகழாரம்
15 Oct 2024சென்னை : தினபூமி நாளிதழ் ஆசிரியர் மணிமாறன் அகால மரணம் அடைந்தார் என்கின்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தோம்.
-
எப்போதும் சவால்களை தேடிச் சென்றவர்: கலாமை நினைவுகூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி
15 Oct 2024புது டெல்லி, அப்துல் கலாம் எப்போதும் சவால்களை தேடிச் சென்றார் என்று அவரது பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் நினைவுகூர்ந்துள்ளார்.
-
உலகத்தரம் வாய்ந்த வீரர்: விராட் கோலிக்கு இந்திய அணி பயிற்சியாளர் காம்பீர் புகழாரம்
15 Oct 2024பெங்களூரு : உலகத்தரம் வாய்ந்த வீரர் விராட் கோலிக்கு இந்திய அணி பயிற்சியாளர் காம்பீர் புகழாரம் சூட்டியுள்ளார்.
சுற்றுப்பயணம்...
-
கனமழை எச்சரிக்கை: புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
15 Oct 2024புதுச்சேரி : கனமழை எச்சரிக்கை காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தொடர் கனமழை: வண்டலூர் பூங்கா இன்று செயல்படாது என அறிவிப்பு
15 Oct 2024சென்னை, தொடர் கனமழை காரணமாக வண்டலூர் பூங்கா இன்று செயல்படாது என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
புயல் மழையால் திருப்பதியில் இன்று வி.ஐ.பி தரிசனம் ரத்து
15 Oct 2024திருப்பதி, புயல் மழை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
தொழில் வல்லுநர்களில் இந்தியர்களே அதிகம்: இங்கிலாந்து ஆய்வில் தகவல்
15 Oct 2024லண்டன், இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்கள் அதிகம் பேர் தொழில் வல்லுநர்களாக இருக்கிறார்கள் என பாலிசி எக்ஸ்சேஞ் அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
-
மகராஷ்டிர சட்டசபைக்கு நவம்பர் 20-ம் தேதி தேர்தல்: ஜார்க்கண்ட்டில் 2 கட்டங்களாக வாக்குப் பதிவு
15 Oct 2024புது டெல்லி, மகராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நவம்பர் 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், ஜார்க்கண்ட்டுக்கு நவம்பர் 13, 20 என இர
-
செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர்வரத்து அதிகரிப்பு
15 Oct 2024சென்னை : செம்பரம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் காவேரி மருத்துவமனையின் 4 அவசர கால கிளினிக்குகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார்
15 Oct 2024சென்னை, சென்னை விமானநிலையத்தில் புதிதாக காவேரி மருத்துவமனையின் 4 கிளினிக்குகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
-
உலக விண்வெளி விருது பெற்றார்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்
15 Oct 2024பெங்களூரு, இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் 2024-ம் ஆண்டுக்கான சர்வதேச விண்வெளி கூட்டமைப்பின் சார்பில் வழங்கப்படும் உலக விண்வெளி விருதினை பெற்றுள்ளார்.
-
வியாழன் கிரகத்தின் நிலவுக்கு யுரோப்பா கிளிப்பர் விண்கலம்: நாசா விண்வெளி மையம் அனுப்பியது
15 Oct 2024வாஷிங்டன், வியாழன் கிரகத்தின் நிலவுக்கு யுரோப்பா கிளிப்பர் விண்கலத்தை நாசா அனுப்பியுள்ளது.