Idhayam Matrimony

சுப்ரீம் கோர்ட் உத்தரவு எதிரொலி: கொல்கத்தா பெண் மருத்துவரின் பெயர், புகைப்படத்தை நீக்கியது விக்கிப்பீடியா

புதன்கிழமை, 18 செப்டம்பர் 2024      உலகம்
Supreme-Court 2023-04-06

புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட பயிற்சி பெண் மருத்துவரின் பெயர், புகைப்படத்தை விக்கிப்பீடியா நீக்கியுள்ளது.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை சுப்ரீம் கோர்ட்ம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து விக்கிப்பீடியாவின் தாய் நிறுவனமான விக்கிமீடியா அறக்கட்டளை தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. பொதுவாக விக்கிப்பீடியாவில் பதிவாகும் கட்டுரைகளை விக்கிமீடியா அறக்கட்டளை திருத்தவோ அல்லது சென்சார் செய்வதோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது கொள்கை ரீதியிலான முடிவு.

இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக அறக்கட்டளை சார்பில் பிரதிநிதி ஒருவர் பயனர்கள் கலந்து கொண்ட விவாதத்தில் பங்கேற்றார் என்றும். அதில் கொல்கத்தா சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பயிற்சி மருத்துவரின் பெயரை கட்டுரையில் குறிப்பிட வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பினார். இதையடுத்து தன்னார்வ எடிட்டர் ஒருவர் கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த பாதிக்கப்பட்ட மருத்துவரின் பெயர் மற்றும் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. விக்கிப்பீடியா தளத்தில் உள்ள இந்தக் கட்டுரை இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.22-க்கு கடைசியாக திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவரின் பெயரை குறிப்பிட்டது குறித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு எங்கள் பார்வைக்கு கிடைத்தது. பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பாதிக்கப்பட்டவரின் பெயர் போன்ற விவரத்தை வெளியிடும் போது சில வழக்குகளில் அவரின் குடும்பத்தினர் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

விக்கிமீடியா அறக்கட்டளை அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டிருந்தாலும் பிற நாடுகளில் சட்டதிட்டங்களுக்கு மதிப்பளிப்போம். அந்த வகையில் இது போல நீதிமன்ற சிக்கல்கள் எழும்போது அதற்கு எளிதில் தீர்வு காண முடியும் என நம்புகிறோம்.” என விக்கிமீடியா அறக்கட்டளையின் ஜோ சுதர்லாந்த் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து