முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காசாவின் மேற்குக்கரை முகாம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு

வெள்ளிக்கிழமை, 4 அக்டோபர் 2024      உலகம்
Gaza-2024-09-12

Source: provided

ரமல்லா : காசாவின் மேற்குக்கரையில் அமைந்துள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றனர்.

இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் அரசு போர் அறிவித்தது. இதுவரை ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100-க்கும் மேற்பட்டோரை இஸ்ரேல் மீட்டுள்ளது. தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக அழிக்கும் நோக்கில் காசாவில் உள்ள பல்வேறு பகுதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில் இதுவரை சுமார் 41 ஆயிரத்துக்கு அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், காசாவின் வட மேற்குக்கரையில் உள்ள துல்கர் அகதிகள் முகாமை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 18 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. துல்கர் முகாமில் இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் ஏற்பட்டதாக பாலஸ்தீன பிரிவுகளின் ஒருங்கிணைப்பாளர் பைசல் சலாமா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து