முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐப்பசி மாத பூஜை: சபரிமலை கோவில் நடை 16-ம் தேதி திறப்பு

சனிக்கிழமை, 12 அக்டோபர் 2024      ஆன்மிகம்
Sabarimala 2023-11-17

Source: provided

சபரிமலை : ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை வரும் 16-ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

புகழ்பெற்ற  சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை, பங்குனி உத்திர திருவிழா, ஓணம் போன்ற நாட்களில் கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். இவை தவிர தமிழ் மாதத்தின் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

அதன்படி ஐப்பசி மாத பூஜைக்காக கோவில் நடை வரும் 16-ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் ராஜீவரரு தலைமையில், மேல்சாந்தி பி.என்.மகேஷ் கோயில் நடையை திறந்து வைத்து தீபாராதனை காண்பிக்கிறார். பின்னர் 21-ம் தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து மன்னர் பாலராம வர்ம மகராஜா பிறந்த நாளில் நடைபெறும் விசேஷ பூஜையான சித்திர ஆட்டத் திருநாளுக்காக வரும் 30-ம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டு 31 -ம் தேதி இரவு சாத்தப்படுகிறது. ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து