எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் கடந்த 7ம் தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்சில் 149 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 556 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷபீக் 102 ரன், ஷான் மசூத் 151 ரன், ஆகா சல்மான் 104 ரன் எடுத்தனர். இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 150 ஓவர்களில் 7 விக்கெட்டை மட்டும் இழந்து 823 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து தரப்பில் ஹாரி புரூக் 317 ரன்னும் ஜோ ரூட் 262 ரன்னும் அடித்து ஆட்டமிழந்தனர். இதனை தொடர்ந்து 2வது இன்னிங்சில் களமிறங்கிய பாகிஸ்தான் தொடக்கம் முதல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பாகிஸ்தான் தனது 2வது இன்னிங்சில் 54.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 220 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 47 ரன் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது.
இவ்விரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நாளை (15ம் தேதி) தொடங்குகிறது. இந்த சூழலில், இந்த ஆட்டத்தில் தோல்வி கண்டதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் அணியாக மோசமான உலக சாதனையை பாகிஸ்தான் படைத்துள்ளது. அதாவது, ஒரு போட்டியில் முதல் இன்னிங்சில் 500+ ரன்கள் அடித்தும் கடைசி இன்னிங்சில் தோல்வியை சந்தித்த முதல் அணி என்ற மோசமான உலக சாதனையை பாகிஸ்தான் படைத்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது, மற்றும் 3வது டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது . முன்னணி வீரர்களான பாபர் அசாம் , ஷாஹீன் ஷா அப்ரிடி , நசீம் ஷா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் அணி., ஷான் மசூத் (கேப்டன்), சவுத் ஷகீல் (துணை கேப்டன்), அமீர் ஜமால், அப்துல்லா ஷபீக், ஹசீபுல்லா , கம்ரான் குலாம், மெஹ்ரான் மும்தாஜ், மிர் ஹம்சா, முகமது அலி, முகமது ஹுரைரா, முகமது ரிஸ்வான் , நோமன் அலி, சைம் அயூப், சஜித் கான், சல்மான் ஆகா , ஜாஹித் மெஹ்மூத்.
ஜடேஜாவின் மனைவி பூஜை
கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா, கடந்த 2019-ம் ஆண்டு பா.ஜ.க.வில் சேர்ந்தார். கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டமன்ற தேர்தலில் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் ரிவாபா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். குஜராத் சாட்டமன்ற தேர்தலில் தனது மனைவிக்கு ஆதரவாக ரவீந்திர ஜடேஜா பிரசாரம் செய்தார். சமீபத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ரவீந்திர ஜடேஜா, பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்நிலையில், குஜராத்தில் நடைபெற்ற விஜயதசமி பூஜையில், ரிவாபா ஜடேஜா துப்பாக்கியை வைத்து பூஜை செய்தார். ஜாம்நகரில் விமரிசையாக நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட ரிவாபா ஜடேஜா, பயபக்தியோடு துப்பாக்கிக்கு மலர் வைத்து பூஜை செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
ஜானிக் சினெர் சாம்பியன்
ஷாங்காய் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வந்தது. இதில் நடந்த ஒற்றையர் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் 'நம்பர் ஒன்' வீரரான இத்தாலியின் ஜானிக் சினெர் 6-4, 7-5 என்ற நேர் செட்டில் 33-ம் நிலை வீரரான தாமஸ் மசாக்கை (செக்குடியரசு) தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்த வெற்றியின் மூலம் சினெர் இந்த ஆண்டு இறுதிவரை தரவரிசையில் முதலிடத்தில் நீடிப்பார். இத்தகைய பெருமையை பெறும் முதல் இத்தாலி வீரர் சினெர் ஆவார்.மற்றொரு அரைஇறுதி ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-4, 7-6 (8-6) என்ற நேர் செட்டில் டெய்லர் பிரிட்சை (அமெரிக்கா) வீழ்த்தினார்.
இதன்படி நேற்று நடைபெற்ற ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்சை 7-6(4), 6-3 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இத்தாலி வீரர் ஜானிக் சினெர் சாம்பியன் பட்டம் வென்றார். வெற்றிக்குப்பின்னர் பேசிய ஜானிக் சினெர், "இது மிகவும் கடினமான போட்டி, வெளிப்படையாக, நோவாக்கிற்கு எதிராக விளையாடுவது எங்களிடம் உள்ள கடினமான சவால்களில் ஒன்றாகும். நான் நிலைமையை எவ்வாறு கையாண்டேன் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர் முதல் செட்டில் சிறப்பாக ஆடினார். அவரை நிறுத்த என்னால் ஒரு வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நான் ஒரு நல்ல டை-பிரேக் விளையாடினேன், இது இரண்டாவது செட்டில் நன்றாகத் தொடங்க நம்பிக்கையை அளித்தது" என்று அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
சட்டசபையில் அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் திடீர் போராட்டம்
14 Oct 2025சென்னை : சட்டசபையில் அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அங்கு திடீர் பரபரப்பு நிலவியது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-10-2025.
14 Oct 2025 -
பீகார் தேர்தலில் தொகுதிப் பங்கீடு: ஆர்.ஜே.டி. 135, காங்கிரஸ் 61 தொகுதிகளில் போட்டி
14 Oct 2025புதுடெல்லி : பீகார் தேர்தலில் தொகுதிப் பங்கீடில் ஆர்.ஜே.டி. 135, காங். 61 இடங்களில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
மாநில திட்டக் குழுவின் 4 அறிக்கைகள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு
14 Oct 2025சென்னை : மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட 4 அறிக்கைகள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
-
ரூ.95 ஆயிரத்தை நெருங்கிய ஒரு பவுன் தங்கம் விலை : ஒரேநாளில் ரூ.1,960 உயர்வு
14 Oct 2025சென்னை : 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (அக்.14) பவுனுக்கு ரூ.1,960 உயர்ந்து மீண்டும் அதிர்ச்சியளித்துள்ளது.
-
சாதி பெயர்களில் மாற்றம் வேண்டும்: முதல்வரிடம் திருமாவளவன் கோரிக்கை
14 Oct 2025சென்னை : சாதி பெயர்களில் மாற்றம் வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
கர்நாடக முதல்வர் சித்தராமையா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
14 Oct 2025பெங்களூரு : கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்
-
கரூர் சம்பவம்: ஆவணங்களை சமர்ப்பித்தது எஸ்.ஐ.டி.
14 Oct 2025சென்னை : கரூர் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததையடுத்து ஆவணங்களை சமர்ப்பித்தது எஸ்.ஐ.டி.
-
6 நாட்களாக நீடித்த டேங்கர் லாரி சங்கங்களின் போராட்டம் வாபஸ்
14 Oct 2025சென்னை : சென்னை ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து 6 நாட்களாக நீடிதத் டேங்கர் லாரி சங்கங்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.
-
மனிதராக இருப்பதற்கு கூட தகுதியற்றவர்: சி.வி.சண்முகத்திற்கு அமைச்சர் கண்டனம்
14 Oct 2025சென்னை : மனிதராக இருப்பதற்கு கூட தகுதியற்றவர் சி.வி.சண்முகம் என்று அமைச்சர் கீதா ஜீவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஓட்டுநர் தேர்வு தானியங்கி மையங்கள் அமைக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து
14 Oct 2025சென்னை : தமிழ்நாட்டில் ஓட்டுநர் தேர்வு தானியங்கி மையங்கள் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
-
தமிழக 'மா' விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க மாம்பழ ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
14 Oct 2025சென்னை : நாட்டின் பொருளாதாரத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்யவும், மா விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கவும் மாம்பழ ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை தேவை என்று ப
-
நேரடி வரி வருவாய் 6.33 சதவீதம் அதிகரிப்பு - மத்திய அரசு தகவல்
14 Oct 2025டெல்லி : நேரடி வரி வருவாய் 6.33 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
வருங்கால வைப்புநிதியில் இருந்து இனி 100 சதவீதம் வரை பணம் எடுக்கலாம்
14 Oct 2025புதுடெல்லி : வருங்கால வைப்புநிதியில் இருந்து இனி 100 சதவீதம் வரை பணம் எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டப்பேரவைியல் கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று ஆரம்பம் : முதல் நாளில் இரங்கல் தீர்மானம் - அவை ஒத்திவைப்பு
14 Oct 2025சென்னை : தமிழ்நாடு சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று முதல் நடைபெறுவுள்ளது.
-
சர்வதேச விதிகளை சில நாடுகள் வெளிப்படையாக மீறுகின்றன : ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
14 Oct 2025புதுடெல்லி : உலக நாடுகளில் அமைதிக்காப்பு பணிகளில் இந்திய ராணுவ பெண் அதிகாரிகளின் பங்களிப்பு உள்ளதாக பெருமிதம் தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சர்வதேச வ
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 3 பேருக்கு ஜாமீன்
14 Oct 2025சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
-
இ.பி.எஸ். வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
14 Oct 2025சென்னை : சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு நேற்று இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை
-
பீகார் சட்டமன்ற தேர்தலுக்காக வெளியிடப்படும் விளம்பரத்திற்கு சான்றிதழ் பெறுவது கட்டாயம்
14 Oct 2025பீகார், பீகார் சட்டமன்ற தேர்தலுக்காக வெளியிடும் விளம்பரத்திற்கு சான்றிதழ் பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பாலஸ்தீன தனி நாடு பற்றி கேள்வி: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதில்
14 Oct 2025வாஷிங்டன் : பாலஸ்தீன தனி நாடு பற்றிய கேள்விக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதில் அளித்துள்ளார்.
-
தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
14 Oct 2025சென்னை : தமிழகத்தில் இன்று கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம
-
பீகார் சட்டமன்ற தேர்தல்: 71 பேரின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க.
14 Oct 2025பாட்னா : பீகார் தேர்தலில் போட்டியிடவுள்ள 71 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டது.
-
சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
14 Oct 2025சென்னை : சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் அமைகிறது: ரூ.87,520 கோடியில் கூகுள் ஏ.ஐ. மையம் : பிரதமர் மோடியிடம் சுந்தர் பிச்சை விவரிப்பு
14 Oct 2025புதுடெல்லி : விசாகப்பட்டினத்தில் 15 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் கூகுள் அமைக்க உள்ள செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மையம் குறித்து அதன் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, பி
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்: த.வெ.க. நிர்வாகி
14 Oct 2025கரூர் : கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தி னருக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும் என்று த.வெ.க. நிர்வாகி அறிவித்துள்ளார்.