முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ம.பி. பாந்தவ்கர் புலிகள் காப்பகத்தில் கடந்த 3 நாளில் 10 யானைகள் பலி: வனத்துறையினர் தீவிர விசாரணை

சனிக்கிழமை, 2 நவம்பர் 2024      இந்தியா
Elephants 2024-11-02

Source: provided

போபால் : மத்தியப் பிரதேசத்தில் உள்ள பாந்தவ்கர் புலிகள் காப்பகத்தில் 13 யானைகள் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த அக்டோபர் 29ம் தேதி முதல் அடுத்தடுத்து 10 யானைகள் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபர் 29 அன்று 4 யானைகளும், 30 அன்று 4 யானைகளும் 31 அன்று 2 யானைகளும் உயிரிழந்தன. யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்தற்கான காரணம் புரியாமல் குழம்பிய வனத்துறை அதிகாரிகள் யானைகளுக்கு பிரேத பரிசோதனை உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் மேற்கொண்டனர். எனினும் சரியான காரணத்தை கண்டறிய முடியவில்லை.

பூஞ்சை பாதித்த கருவரகை (Kodo millet) சாப்பிட்டதால் யானைகள் உயிரிந்ததா என்ற அச்சத்தில் அதன் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவும் இதுகுறித்து உயர்மட்ட அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். 24 மணி நேரத்திற்குள் இந்து தொடர்பாக அறிக்கை சமர்பிக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து