முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

த.வெ.க. நிர்வாகிகளுடன் விஜய் இன்று ஆலோசனை

சனிக்கிழமை, 2 நவம்பர் 2024      தமிழகம்
Vijay 2024-11-02

Source: provided

சென்னை : தவெகவின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் இன்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் கட்சியின் தலைவர் விஜய் கலந்துக்கொள்ள இருக்கிறார்.

தவெகவின் முதல் மாநில மாநாட்டை கடந்த 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி சாலை பகுதியில் நடத்திமுடித்தார் அக்கட்சியின் தலைவர் விஜய். இந்த மாநாட்டில் அக்கட்சியின் கொள்கைகள், கட்சி பெயர், கொடி நிறம், கொடியில் இருக்கும் வாகைப்பூ, யானை, நட்சத்திரங்கள் குறித்தெல்லாம் விளக்கம் அளிக்கப்பட்டது.

அந்த மாநாட்டில் தனது முதல் அரசியல் பேச்சை பேசிய தவெக தலைவர் விஜய், நேரடியாக பாஜகவையும், திமுகவையும் சாடி பேசினார். அதேபோல், மற்ற சில கட்சிகளையும் அவர் விமர்சித்து பேசியிருந்தார். குறிப்பாக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என அந்த மாநாட்டில் விஜய் பேசியது பெரும் பேசுபொருளாக மாறியது.

விசிக துவக்கம் முதலே ஆட்சி அதிகாரத்தில் பங்கு எனும் கொள்கையை கொண்டிருக்கும் நிலையில், விஜய்யின் பேச்சு திமுக கூட்டணியில் இருக்கும் விசிகவை பிரிக்கும் நோக்கமே என பல்வேறு தரப்புகளில் இருந்தும் விமர்சனங்கள் வந்தன. ஆனால் விசிக, தவெகவின் ஆட்சி அதிகாரத்தில் பங்கு எனும் கோட்பாட்டை ஏற்கவில்லை என்றும், திமுகவுடனான கூட்டணியை முறிக்கவும் முடியாது என்றும் விளக்கம் அளித்திருந்தது.

இந்நிலையில், கடந்த இரு தினங்களாக விஜய்யின் கருத்துக்கும் கொள்கைகளுக்கும் எதிராக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துவருகிறார். நேற்றும் கூட சீமான், “தம்பி வேறு கொள்கை வேறு” என பேசியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் தவெகவின் நிர்வாகி சம்பத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “சீமான் தன் கருத்தை அவரது இதயத்தில் இருந்து பேசவில்லை என்பதால் அதை எங்களது மூளைக்குள் கொண்டுபோக விரும்பவில்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இப்படி தவெகவின் முதல் மாநில மாநாடு தொடர்பாக பல்வேறு எதிர்வினைகளும் நடந்துவரும் நிலையில், தவெகவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பொருளாளர் வெங்கட்ராமன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து இன்று மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அதில் கட்சியின் உட்கட்ட அமைப்பு, கட்சியின் அடுத்த கட்ட நகர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்ய உள்ளனர். இன்று நடைபெறும் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து