முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் ரயில் மோதி 4 தமிழக தொழிலாளர்கள் பலி : ரயில்வே பாலத்தில் தூய்மை பணி மேற்கொண்ட போது துயரம்

சனிக்கிழமை, 2 நவம்பர் 2024      இந்தியா
Kerala 2024-11-02

Source: provided

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் ரயில்வே பாலத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த 4 தமிழக தொழிலாளர்கள் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பலியான துயர சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எக்ஸ்பிரஸ் ரயில்...

திருவனந்தபுரம் - டெல்லி இடையே கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டுகிறது. இந்த ரயில் நேற்று டெல்லியில் இருந்து கேரளாவின் பாலக்காடு மாவட்டம் சோரனூர் அருகே வந்துகொண்டிருந்தது. இந்நிலையில், மாலை 3.05 மணியளவில் சோரனூர் பாலத்தில் அமைந்துள்ள தண்டவாளத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் வந்துகொண்டிருந்தது. அப்போது, சோரனூர் ரயில்வே பாலத்தில் ரயில்வே ஒப்பந்த ஊழியர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

தூய்மை பணியில்... 

வேகமாக வந்த ரயில் தண்டவாளத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த 2 பெண்கள் உள்பட ஒப்பந்த ஊழியர்கள் 4 பேர் மீதும் மோதியது. இந்த கோர விபத்தில் ஊழியர்கள் அனைவரும் தண்டவாளத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில், 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்த ரயில்வே ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் அனைவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

சேலத்தை சேர்ந்த... 

தகவலறிந்து விரைந்து வந்த ரயில்வே போலீசார், உயிரிழந்த 3 பேரிடன் உடலைகளையும் மீட்டுள்ளனர். ஆனால், ரயில் மோதியதில் பாரதபுலா ஆற்றில் தூக்கி வீசப்பட்ட மற்றொரு ஊழியரின் உடலை தேடி வருகின்றனர். ரயில் மோதியதில் உயிரிழந்த 2 பெண்கள் உள்பட 4 தூய்மை பணியாளர்களும் தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது உறுதியாகியுள்ளது. உயிரிழந்தவர்கள் சேலம் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன், வள்ளி, லட்சுமணன் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து