முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போட்ஸ்வானா புதிய அதிபருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 3 நவம்பர் 2024      இந்தியா
Modi 2024-11-03

Source: provided

புதுடெல்லி : போட்ஸ்வானா நாட்டின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டுமா பொகோவுக்கு  பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு போட்ஸ்வானா. அந்நாட்டில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் டுமா பொகோ தலையிலான ஜனநாயக மாற்றத்திற்கான குடை கூட்டணி வெற்றி பெற்றது. 

இதன் மூலம் போட்ஸ்வானாவில் 58 ஆண்டுகளுக்குப்பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற டுமா பொகோ போட்ஸ்வானாவின் 6-வது அதிபராக நேற்று முன்தினம் பதவியேற்றுக்கொண்டார். 

இந்நிலையில், போட்ஸ்வானா புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டுமா பொகோவுக்கு  பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் , 

போட்ஸ்வானாவின் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள டுமா பொகோவுக்கு வாழ்துகள். இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன் என தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து