முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத்தில் நடந்த சோகம்: காரில் சிக்கி 4 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழப்பு

திங்கட்கிழமை, 4 நவம்பர் 2024      இந்தியா
Car 2024-11-04

காந்திநகர், குஜராத்தில் எதிர்பாராத விதமாக காரில் சிக்கி 4 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 4 குழந்தைகள் காருக்குள் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ரந்தியா கிராமத்தில் நடந்துள்ளது. பலியானவர்கள் மத்திய பிரதேசத்தில் உள்ள தார் பகுதியை சேர்ந்த விவசாயத் தொழிலாளி தம்பதியின் குழந்தைகள் என்று துணைக் காவல் கண்காணிப்பாளர் சிராக் தேசாய் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "ஒரு பண்ணைக்கு வேலைக்கு சென்ற பெற்றோர், தங்களது 7 குழந்தைகளை அங்கே விளையாடுமாறு விட்டுவிட்டு சென்றுள்ளனர். 7 குழந்தைகளில் 4 பேர் பண்ணை வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த உரிமையாளரின் காரில் நுழைந்துள்ளனர். எதிர்பாராத விதமாக காரின் கதவு மூடப்பட்டது. இதில் காரில் சிக்கிக்கொண்ட 4 குழந்தைகளுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு காரிலேயே உயிரிழந்தனர். இதில் உயிரிழந்த குழந்தைகள் 2 முதல் 7 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். குழந்தைகளின் பெற்றோர் மற்றும் கார் உரிமையாளர் மாலை வேலை முடிந்து திரும்பி வந்தபோது, அவர்கள் சடலங்களை காரில் கண்டனர்" என்றார்.

இதையடுத்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அம்ரேலி காவல் நிலையத்தில் தற்செயலான மரணம் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து