முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆக்ரா அருகே மிக்-29 போர் விமானம் விபத்து: அதிர்ஷ்டவசமாக விமானி உயிர் தப்பினார்

திங்கட்கிழமை, 4 நவம்பர் 2024      இந்தியா
UP 2024-11-04

ஆக்ரா, உத்தர பிரதேசம் ஆக்ரா அருகே இந்திய விமானப் படையின் மிக்-29 போர் விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக விமானி உயிர் தப்பினார்.

ரஷிய தயாரிப்பு மிக் 29 ரக விமானங்கள் விமானப் படையில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.  இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே சோங்கா கிராமத்தில் மிக் 29 ரக போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. அப்போது விமானி துரிதமாக செயல்பட்டு பாராசூட் மூலமாக உயிர் தப்பினார்.

முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதத்தில் ராஜஸ்தான் பகுதியில் இதே மிக் 29 ரக விமானம் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. இரு மாதங்களில் நடக்கும் 2-வது விபத்து இதுவாகும். பஞ்சாபில் இருந்து புறப்பட்ட விமானம் ஆக்ரா அருகே தீப்பிடித்து எரிந்ததாகவும் இதில் விமானி உயிர் தப்பியதாகவும் மேலும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து