முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடப்பு கல்வியாண்டு முதல் தேசிய கல்விக்கொள்கை ஒடிசாவில் அமல்

ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2024      இந்தியா
Mohan-Charan 2024-10-25

Source: provided

புவனேஸ்வர் : ஒடிசாவில் நடப்பு கல்வி ஆண்டு முதல் தேசிய கல்வி கொள்கையை  அம்மாநில அரசு அமல்படுத்தவுள்ளது. 

ஒடிசா மாநிலத்தில் கல்வி முறையில் ஏராளமான சீர்திருத்தங்களை கொண்டு வர உள்ளது. இதன் ஒரு பகுதியாக அரசு நடத்தும் பல்கலைக் கழகங்கள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டு முதல் தேசிய கல்விக்கொள்கையை  அமல்படுத்த உள்ளது. இதற்கான முடிவை அம்மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி எடுத்ததாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தேசிய கல்விக் கொள்கையின்படி உயர்கல்வி முறையை மிகவும் தரமானதாகவும், தன்னாட்சி மற்றும் உள்ளடக்கியதாகவும் மாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையின்படி, வழக்கமான மூன்றாண்டு படிப்புகளுக்குப் பதிலாக நான்கு ஆண்டு இளங்கலை பட்டப் படிப்புகள் தொடங்கப்படும். 

இந்த படிப்பில் சேரும் மாணவர்கள், ஒவ்வொரு ஆண்டும் நிறைவு செய்த பிறகு, டிப்ளமோ, பட்டம் மற்றும் கவுரவ பட்டம் ஆகிய சான்றிதழ்களை பெறலாம். பல்கலைக்கழக மானியக்குழுவின் (யு.ஜி.சி.) வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மாநில அரசு கூடுதல் தகுதிகளுக்கான கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. 

இதன் கீழ் மாணவர்கள் திறன் மேம்பாடு, இன்டன்ஷிப், சமூக சேவை மற்றும் பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட என்.சி.சி மற்றும் என்.எஸ்.எஸ். போன்ற கூடுதல் தகுதிகளை வளர்த்துக் கொள்ளலாம். மாணவர்களே தங்கள் பாடங்களை தேர்வு செய்யவும், 'இடைநிற்றல், மீண்டும் சேருதல் விருப்பத்தை பயன்படுத்தி ஏழு ஆண்டுகளுக்குள் பட்டப் படிப்பை முடிக்கவும் இந்த திட்டம் உதவும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து