முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலையாள நடிகர் சித்திக்கின் இடைக்கால முன்ஜாமின் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு

செவ்வாய்க்கிழமை, 12 நவம்பர் 2024      சினிமா
Siddique 2024-03-30

Source: provided

புதுடெல்லி : பிரபல மலையாள நடிகர் சித்திக்கின் இடைக்கால முன்ஜாமினை ஒரு வாரத்துக்கு நீட்டித்து சுப்ரீம் கோ்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மலையாள திரை உலகில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சில நடிகர்கள் மீது நடிகைகள் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினர். நீதிபதி ஹேமா கமிட்டி விசாரணையும் இதனை உறுதிப்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து பாலியல் புகார்கள் குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை கேரள அரசு நியமித்தது. இந்த குழு விசாரணையை தொடங்கிய நிலையில், பல்வேறு போலீஸ் நிலையங்களில் நடிகைகள் புகார்களின் பேரில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதில் முக்கியமானவர் நடிகர் சித்திக். மலையாளம் மட்டுமின்றி தமிழ் உள்பட பல்வேறு மொழி படங்களில் நடித்த இவரை பாலியல் புகாரில் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். 

இதனையடுத்து தலைமறைவான அவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி சுப்ரீம் கோர்ட் இடைக்கால முன்ஜாமின் வழங்கியது.அதன்பிறகு சித்திக், சிறப்பு புலனாய்வு குழு முன்பு கடந்த மாதம் 7 மற்றும் 12-ம் தேதி விசாரணைக்கு ஆஜரானார். 

அப்போது அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாக சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்தது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சித்திக்கின் இடைக்கால முன்ஜாமின் மனு காலம் முடிந்ததால், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று  நீதிபதிகள் திரிவேதி, சதீஷ் சந்திரசர்மா ஆகியோர் முன்னிலையில் முன்ஜாமின் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது சித்திக்கின் இடைக்கால முன்ஜாமினை ஒரு வாரத்துக்கு நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து