முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வருகிறார்

செவ்வாய்க்கிழமை, 3 டிசம்பர் 2024      இந்தியா
Putin 2024-12-03

Source: provided

புது டெல்லி: பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா வருகிறார்.  

ரஷ்யாவின் கஸான் நகரில், பிரிக்ஸ் நாடுகளின் 16-வது மாநாடு நடைபெற்றது. இந்த அமைப்பில் உள்ள பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, ஈரான், எகிப்து, எதியோப்பியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் பிரதமர்  மோடி பங்கேற்றார். 

அப்போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை தனியாக சந்தித்து இருதரப்பு உறவுகள், சர்வதேச அரசியல், பொருளாதார நிலவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, இந்தியாவுக்கு வர வேண்டும் என்று அதிபர் புடினுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். 

ரஷ்ய - இந்திய தலைவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை சந்தித்து பேசுவது என்று ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய - ரஷ்ய ஆண்டு மாநாட்டில் இருநாட்டு தலைவர்களும் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில், 23-வது இந்திய - ரஷ்ய ஆண்டு மாநாடு அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அதிபர் புடின் பங்கேற்க இந்தியா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த ஜூலை மாதம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் 22-வது இந்திய - ரஷ்ய ஆண்டு மாநாடு நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதன்படி. இந்த ஆண்டு மட்டும் அதிபர் புடினும். பிரதமர் மோடியும் 2 முறை நேரில் சந்தித்து பேசியுள்ளனர்.

இதுகுறித்து ரஷ்ய அதிபர் அலுவலகமான கிரம்ளினின் உதவியாளர் யூரி உஷகோவ்  செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று அதிபர் புடின் இந்திய பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த பயணம் இருக்கும். அதற்கான தேதிகளை இந்திய அரசு முடிவு செய்யும். இருநாட்டு தலைவர்களும் ஆண்டுக்கு ஒரு முறை நேரில் சந்திப்பதும் ஏற்கெனவே முடிவானது. அதன்படி அடுத்த ஆண்டு இருநாட்டு தலைவர்கள் சந்திப்பு நடைபெறும் என்று தெரிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து