முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குறிப்பிட்ட ஒரு நாட்டல் அதிக சதங்கள்: பிராட்மேன் சாதனையை சமன் செய்கிறார் கோலி

செவ்வாய்க்கிழமை, 3 டிசம்பர் 2024      விளையாட்டு
Virat-Kohli 2023 07-22

Source: provided

அடிலெய்டு : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதமடித்து அசத்திய நிலையில், இன்னும் ஒரு சதம் அடித்தால், அவர், டான் பிராட்மேனின் உலக சாதனையை சமன் செய்வார். அதற்கான வாய்ப்பு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் அமையவுள்ளது.

சுற்றுப்பயணம்...

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி வரும் 6ம் தேதி தொடங்குகிறது.

அபார வெற்றி.... 

முதல் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு பேட்டிங்கில் அபாரமாக ஆடிய ஜெய்ஸ்வால் 161 ரன்னும், கோலி 100 ரன்னும் அடித்து அசத்தினர். பந்துவீச்சில் பும்ரா, சிராஜ் மற்றும் அறிமுக வீரர் ஹர்ஷித் ராணா ஆகியோர் அசத்தினர். இதன் காரணமாக இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சமீப காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாற்றமாக விளையாடி வந்தார். அதனால் விமர்சனங்களை சந்தித்த அவரால் ஆஸ்திரேலியாவில் சாதிக்க முடியுமா? என்ற கேள்விகள் எழுந்தன.

வெளிநாட்டு வீரர்... 

ஆனால் முதல் போட்டியிலேயே சதமடித்த அவர் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். மேலும் ஆஸ்திரேலிய மண்ணில் 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் அவர் 10 சதங்களை அடித்துள்ளார். அதன் வாயிலாக ஆஸ்திரேலியாவில் அதிக சதங்கள் அடித்த வெளிநாட்டு பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார். இந்நிலையில் இந்த தொடரில் இன்னும் ஒரு சதம் அடித்தால் குறிப்பிட்ட ஒரு நாட்டில் அதிக சதங்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற டான் பிராட்மேனின் உலக சாதனையை விராட் கோலி சமன் செய்வார். 

கோலி 10 சதங்கள்...

டான் பிராட்மேன் (ஆஸ்திரேலியா) இங்கிலாந்தில் 11 சதங்கள் அடித்துள்ளார். இவருக்கு அடுத்து விராட் கோலி (இந்தியா) ஆஸ்திரேலிய மண்ணில் 10 சதங்கள் அடித்துள்ளார்.  இந்த சாதனை பட்டியலில் தலா 9 சதங்களுடன் சச்சின் (இந்தியா) மற்றும் ஜாக் ஹோப்ஸ் (இங்கிலாந்து) 3-வது இடத்தில் உள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து