முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் நேத்ரன் காலமானார்

புதன்கிழமை, 4 டிசம்பர் 2024      சினிமா
Netran 2024-12-04

சென்னை, சின்னத்திரை நடிகர் நேத்ரன் புற்றுநோய் பாதிப்பால் புதன்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

டான்சர், நடிகர் என பன்முகம் கொண்ட நேத்ரன், ‘ஜோடி நம்பர் 1’ 3வது சீசன் மற்றும் 5வது சீசன், ‘பாய்ஸ் vs கேர்ள்ஸ்’, ‘சூப்பர் குடும்பம்’ உள்ளிட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று கவனம் பெற்றவர். தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாக்கியலட்சுமி’, ‘ரஞ்சிதமே’ தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் தடம் பதித்துள்ளார்.

இவர் சின்னத்திரை நடிகை தீபா என்பவரை காதலித்து மணமுடித்தார். அவர் ‘சிங்கப்பெண்ணை’ தொடரில் நடித்து வருகிறார். நேத்ரன் - தீபா தம்பதிக்கு இரண்டு மகள்கள். அண்மையில் இவரது மூத்த மகள் அபிநயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “அப்பாவுக்கு புற்றுநோய் உறுதியாகியுள்ளது” என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நேத்ரன் புதன்கிழமை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு சின்னத்திரை நடிகர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து