முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேக் இன் இந்தியா திட்டம்: ரஷ்ய அதிபர் புடின் பாராட்டு

வியாழக்கிழமை, 5 டிசம்பர் 2024      உலகம்
Putin 2023-03-02

மாஸ்கோ, பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் பாராட்டக் கூடியது என்று மாஸ்கோவில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் அதிபர் புடின் தெரிவித்தார். 

 மாஸ்கோவில்  முதலீட்டாளர்கள்  மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அந்நாட்டு அதிபர் புடின் பேசியதாவது,

இந்தியாவில் சிறு, குறு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் பாராட்டக் கூடியது.  இந்திய பிரதமர் மோடியும், அவரது தலைமையிலான  அரசும் நிலையான சூழலை உருவாக்கி  வருகிறது. 

இந்தியாவுக்கு முதலில் வாருங்கள் என்ற கொள்கையை இந்தியாவின் தலைமை பின்பற்றுவதே இதற்கு காரணம். இந்தியாவில் முதலீடு செய்வது லாபகரமானதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். 

ரஷ்யாவில் விவசாயம் உட்பட அனைத்து துறைகளிலும் உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு வாய்ப்புகளை விரிவு படுத்துவதற்கான தேவை உள்ளது. கடந்த ஆண்டு நாங்கள் 66 பில்லியன் டாலர் அளவுக்கு தானியங்களை ஏற்றுமதி செய்தோம் என்றார். 

இந்தியாவின் அழைப்பை ஏற்று ரஷ்ய அதிபர் புடின் அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். புடினின் இந்த பயணத்தின் போது இரு நாட்டு நலன்கள் தொடர்பாக பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து