முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி முன்னிலையில் மகராஷ்டிராவின் முதல்வராக பதவியேற்றார் தேவேந்திர ஃபட்னாவிஸ் துணை முதல்வர்களாக அஜீத் பவார், ஏக்நாத் ஷிண்டேவும் பதவியேற்பு

வியாழக்கிழமை, 5 டிசம்பர் 2024      இந்தியா
Untitled-1

Source: provided

மும்பை: பிரதமர் மோடி முன்னிலையில் மகராஷ்டிராவின் முதல்வராக 3வது முறையாக பதவியேற்றார் தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதல்வர்களாக அஜீத் பவார், ஏக்நாத் ஷிண்டேவும் பதவியேற்றனர்.

மகாராஷ்டிர முதல்வராக பாஜக மூத்த தலைவர் தேவேந்திர ஃபட்னவீஸ் புதன்கிழமை ஒருமனதாக தேர்வு செய்யப்பட்tட நிலையில், அவரது தலைமையிலான பாஜக கூட்டணி அரசு நேற்று (டிச. 5) பதவியேற்றுக் கொண்டது. மும்பை ஆசாத் மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து துணை முதல்வர்களாக அஜீத் பவாரும், ஏக்நாத் ஷிண்டேவும் பதவியேற்றுக்கொண்டனர். இந்த பதவியேற்பு நிகழ்வில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரத்தில் கடந்த நவ. 20-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில், பாஜக தலைமையிலான ‘மகாயுதி’ கூட்டணி 230 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது. இக்கூட்டணியில் 132 இடங்களுடன் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை 57 இடங்களையும், அஜீத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களையும் கைப்பற்றின. அதேநேரம், எதிர்க்கட்சிகளின் ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது. இக்கூட்டணியில் காங்கிரஸுக்கு 16, சிவசேனை (உத்தவ் தாக்கரே) கட்சிக்கு 20, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சிக்கு 10 இடங்களே கிடைத்தன.

பாஜகவின் மத்திய பார்வையாளர்களான மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி முன்னிலையில் அக்கட்சியின் புதிய எம்எல்ஏ-க்கள் கூட்டம் மும்பையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மகாராஷ்டிர முதல்வராகவும், சட்டப்பேரவை பாஜக குழுத் தலைவராகவும் தேவேந்திர ஃபட்னவீஸ் (54) ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து