முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்ய நண்பர்களுக்கு இந்தியா துணை நிற்கும்: அதிபர் புடினை சந்தித்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி

புதன்கிழமை, 11 டிசம்பர் 2024      உலகம்
Putin-2024-12-11

மாஸ்கோ, இந்தியா தனது ரஷ்ய நண்பர்களுக்கு எப்போதும் துணை நிற்கும் என்று ரஷ்யாவில் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதிபட தெரிவித்தார். 

இந்தியா - ரஷ்யா இடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மூன்று நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

ரஷ்யாவில் உள்ள இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடிய ராஜ்நாத் சிங், கலினின் கிராட் நகரில் திங்கட்கிழமை நடந்த நிகழ்ச்சியில் ஐ.என்.எஸ். துஷில் என்ற கப்பலை அறிமுகப்படுத்தி, ரஷ்யாவிடம் இருந்து பெற்றுக்கொண்டார். 

நேற்று முன்தினம் மாஸ்கோ நகருக்கு சென்ற ராஜ்நாத் சிங், இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் தலைநகர் மாஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற இந்தியா ரஷ்ய ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான 21-வது கூட்டத்தில் கலந்து கொண்டார். 

அதனை தொடர்ந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். இரு நாடுகள் இடையிலான ராணுவ ஒத்துழைப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். அப்போது ராஜ்நாத் சிங் பேசியதாவது, 

இந்தியா-ரஷ்யா நட்புறவு உலகின் மிக உயரமான மலையை விட உயர்ந்தது. உலகின் மிக ஆழமான கடலை விட ஆழமானது. இந்தியா தனது ரஷ்ய நண்பர்களுக்கு எப்போதும் துணை நிற்கும். எதிர்காலத்திலும் அதை தொடருவோம். இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து