எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, திருவள்ளுவர் திருநாளையொட்டி தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 2025-ம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருது, 2024--ம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, மகாகவி பாரதியார் விருது, தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, முத்தமிழறிஞர் கலைஞர் விருது உள்ளிட்ட பத்து விருதுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் விருதாளர்களுக்கு வழங்கி சிறப்பித்தார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று (15.1.2025) தலைமைச் செயலகத்தில், திருவள்ளுவர் திருநாளையொட்டி தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் தமிழ் மொழிக்கும், இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழறிஞர்களுக்கு 2025-ம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருது, 2024-ம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது, முத்தமிழறிஞர் கலைஞர் விருது, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் தந்தை பெரியார் விருது மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் டாக்டர் அம்பேத்கர் விருது ஆகிய பத்து விருதுகளை விருதாளர்களுக்கு வழங்கி சிறப்பித்தார்.
தமிழ்ப் புலவர்களையும், தமிழறிஞர்களையும் பெருமைப்படுத்தும் வகையில், கலைஞர் கருணாநிதி தைத்திங்கள் இரண்டாம் நாளை திருவள்ளுவர் திருநாள் எனக் கடைப்பிடிக்க ஆணையிட்டார். கலைஞரின் பெருமுயற்சியால் தொன்மையும், இலக்கிய வளமும் நிறைந்த தமிழ் மொழியானது 2004-ம் ஆண்டு மத்திய அரசால் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.
மேலும், கலைஞரால் சென்னையில் வள்ளுவர் கோட்டம் உருவாக்கப்பட்டதோடு, கன்னியாகுமரியில் 133 அடி உயர அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. கலைஞரால் கன்னியாகுமரியில் நிறுவப்பட்ட அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி கடந்த டிசம்பர் 30 மற்றும் 31 ஆகிய நாள்களில் தமிழ்நாடு அரசின் சார்பில் வெள்ளி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு, அய்யன் திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலம் திறப்பு விழா, திருக்குறள் நெறி பரப்பும் 22 தகைமையாளர்களுக்குச் சிறப்புப் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்குதல், அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலை வெள்ளிவிழாச் சிறப்பு மலர் வெளியீடு, திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்க்குப் பரிசுகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கலைஞரின் வழியில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசும், தமிழறிஞர்களையும், தமிழ்ச் சான்றோர்களையும் சிறப்பிக்கும் விதமாக, மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11-ம் நாள், அரசின் சார்பில் ஆண்டுதோறும் 'மகாகவி நாளாக' கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்து செயல்படுத்தி வருகிறது, தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், இலக்கிய மாமணி விருது என்ற புதிய விருது தோற்றுவிப்பு, ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள் பெற்ற எழுத்தாளர்களுக்கு அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக கனவு இல்லம் வழங்கும் திட்டம், தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், தமிழறிஞர்களை சிறப்பிக்கும் வகையில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2025-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது செந்தமிழ்ச் செம்மல் பெரும் புலவர் மு. படிக்கராமுவுக்கும், 2024-ம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது எல். கணேசனுக்கும், பெருந்தலைவர் காமராசர் விருது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கே.வி. தங்கபாலுவுக்கும், மகாகவி பாரதியார் விருது கவிஞர் கபிலனுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது கவிதைப் பேரொளி பொன். செல்வகணபதிக்கும், தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது மருத்துவர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்துக்கும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது வே.மு.பொதியவெற்பனுக்கும் முதல்வர் ஸ்டாலின் வழங்கி, சிறப்பித்தார்.
இவ்விருதுகளைப் பெறும் விருதாளர்களுக்கு விருதுத்தொகையாக தலா இரண்டு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்யப்பட்டது.
மேலும், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2024-ம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது விடுதலை இராஜேந்திரனுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 2024-ம் ஆண்டிற்கான அண்ணல் அம்பேத்கர் விருது நாடாளுமன்ற உறுப்பினர் து. ரவிக்குமாருக்கும், முதல்வர் வழங்கி சிறப்பித்தார். இவ்விருதுடன் விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக தலா 5 லட்சம் ரூபாய், ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்யப்பட்டது.
கலைஞர் கருணாநிதியின் தமிழ்த் தொண்டினைப் போற்றும்வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அடியொற்றி தமிழுக்குத் தொண்டாற்றும் ஒருவருக்கு வழங்கும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் விருது 2024-இல் தோற்றுவிக்கப்பட்டு, முதன் முறையாக இவ்விருது முத்து வாவாசிக்கு முத்தமிழறிஞர் கலைஞர் விருதுடன், விருதுத் தொகையாக பத்து லட்சம் ரூபாய், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து முதல்வர் சிறப்பித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 2 weeks ago |
-
அமெரிக்காவில் சீக்கியர்களின் தலைப்பாகை கட்டாய அகற்றம் : சீக்கிய மத அமைப்பு கண்டனம்
17 Feb 2025பஞ்சாப் : அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட சீக்கியர்களை அமெரிக்க அதிகாரிகள் தலைப்பாகையை அகற்றும்படி கட்டாயப்படுத்திய சம்பவத்திற்கு சீக்கிய மத அமைப்பினர் கண்டனம் தெர
-
வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை வெற்றி பெறச்செய்ய வேண்டும் : விவசாயிகள் அணி கூட்டத்தில் தீர்மானம்
17 Feb 2025சென்னை : வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை வெற்றி பெறச்செய்ய அக்கட்சியின் விவசாயிகள் பிரிவின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
2 நாள் பயணமாக இந்தியா வருகை; கத்தார் அதிபர் இன்று ஜனாதிபதி, பிரதமர் மோடியை சந்திக்கிறார்
17 Feb 2025டெல்லி, 2 நாள் பயணமாக இந்தியா வந்த கத்தார் அதிபர் இன்று ஜனாதிபதி, பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.
-
சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு தி.மு.க. கூட்டணி கட்சிகள் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்
17 Feb 2025சென்னை: மத்திய அரசசைக் கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
-
தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் வானிலை ஆய்வு மையம் தகவல்
17 Feb 2025சென்னை: தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் துரைமுருகனிடம் முதல்வர் நலம் விசாரித்தார்
17 Feb 2025சென்னை: உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டஅமைச்சர் துரைமுருகனிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
-
தேசிய அளவில் ஊராட்சிகளில் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தமிழகம் முதலிடம்
17 Feb 2025சென்னை: தேசிய அளவில் ஊராட்சிகளில் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
-
குமிரி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற தாதுமணல் கொள்ளை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
17 Feb 2025சென்னை: கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட கடலோர பகுதிகளில் தாது மணல் கொள்ளை தொடர்பான வழக்கை சி.பி.ஐ.
-
முடிவுக்கு வருகிறது உக்ரைன் போர் ? சவுதியில் அமெரிக்கா-ரஷியா பேச்சுவார்த்தை
17 Feb 2025ரியாத்: உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து அமெரிக்கா, ரஷியா பேச்சுவாத்தை நடத்த உள்ளன.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-02-2025.
17 Feb 2025 -
உ.பி. மகா கும்பமேளாவில் 53 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடல்
17 Feb 2025லக்னோ: மகா கும்பமேளாவிற்கு இதுவரை 53 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்து புனித நீராடியுள்ளனர்.
-
4 ரிக்டர் நில அதிர்வுக்கே டெல்லி குலுங்கியது ஏன்?
17 Feb 2025புதுடெல்லி: டெல்லியில் 4.0 ரிக்டருக்கே கட்டிடங்கள் பயங்கரமாகக் குலுங்கியது ஏன்? என்ற தகவல் வெளியாகியுள்ளது.
-
ஒத்த ஓட்டு முத்தையா விமர்சனம்
17 Feb 2025சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஒரே ஒரு ஓட்டு வாங்கியதால், ’ஒத்த ஓட்டு முத்தையா’ என்று அழைக்கப்படும் அரசியல்வாதி கவுண்டமணி, தனது மூன்று தங்கைகளுக்கும் ஒரே குடும்பத்தில்
-
டெல்லி ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
17 Feb 2025புதுடெல்லி, பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் பங்கேற்க புதுடெல்லி ரயில் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை இரவு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் திரண்டதால் ஏற்பட்ட கூட்ட நெரிச
-
அ.தி.மு.க.வில் நான் சாதாரண தொண்டன்: செங்கோட்டையன்
17 Feb 2025திருச்சி, அரசியல் கட்சியில் மூத்த தலைவர், இளைய தலைவர் என்றெல்லாம் கிடையாது என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
-
தடை செய்யப்பட்ட சீன ட்ரோனை இயக்கி சர்ச்சையில் சிக்கிய ராகுல்
17 Feb 2025புதுடில்லி, தடை செய்யப்பட்ட சீன டிரோனை காங்கிரஸ் தலைவர் ராகுல் இயக்கிய வீடியோ வெளியாகி சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் 9-ல் தெப்போற்சவம் ஆரம்பம்
17 Feb 2025திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் 9-ல் தெப்போற்சவம் ஆரம்பமாகிறது.
-
முதலமைச்சரின் காக்கும் கரங்கள் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
17 Feb 2025சென்னை: முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
பிரதீப்பின் நடிப்பு நிச்சயம் பேசப்படும் – இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து
17 Feb 2025பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி பிப்ரவரி 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் படம் டிராகன்.
-
தினசரி விமர்சனம்
17 Feb 2025ஐடியில் பணியாற்றும் நாயகன் ஸ்ரீகாந்த் தனக்கு மனைவியாக வருபவர், தன்னை விட அதிகம் சம்பாதிப்பவராக இருக்க வேண்டும் என நினைக்கிறார்.
-
பிணை கைதிகளை விடுவிக்காவிட்டால் மிகபெரிய வேதனையை சந்திக நேரிடும் : ஹமாசுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
17 Feb 2025இஸ்ரேல் : பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால் நரக வேதனையை அனுபவிக்க நேரிடும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்தார்.
-
டில்லியில் வரும் 20-ம் தேதி புதிய அரசு பதவியேற்கிறது?
17 Feb 2025புதுடில்லி: டில்லி ராம்லீலா மைதானத்தில் பிப்.20ஆம் தேதி பா.ஜ.க.வின் புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெறும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
-
பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுகிறது: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
17 Feb 2025சென்னை: பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை சுதந்திரம் தொடர்ந்து நசுக்கப்பட்டு வருகிறது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 
-
மகளிருக்கான இலவச பஸ்களை அதிகரிக்க தமிழ்நாடு அரசு முடிவு
17 Feb 2025சென்னை : மகளிருக்கான இலவச பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
-
வள்ளுவர் கோட்டம் புனரமைப்பு பணிகள் 90 சதவீதம் முடிந்தன : அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது
17 Feb 2025சென்னை : வள்ளுவர் கோட்டம் புனரமைப்பு பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்ததையொட்டி அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று அமைச்சர் தெரிவித்தார்.