எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பது, பட்டப்படிப்புகளில் கற்றல் முறைகள் தொடர்பாக யு.ஜி.சி. வெளியிட்ட வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக சமீபத்தில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்ட வரைவு நெறிமுறைகளை திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் ஜன.9-ம் தேதி அன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலினை இணைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நேற்று (ஜன.20) கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகள் குறித்து தமிழக முதல்வர் தமது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தும் வகையில் இக்கடிதத்தை எழுதுகிறேன். வரைவு நெறிமுறைகளில் உள்ள பல விதிகள் மாநிலங்களின் கல்விமுறை மற்றும் கல்விக் கொள்கைகளுக்கு முரணாக உள்ளன. மேலும், வரைவு யுஜிசி (இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் வழங்குவதற்கான குறைந்தபட்ச தரநிலைகள்) – நெறிமுறைகள் 2024 தொடர்பான கவலைக்குரிய சில முக்கிய விதிகள் குறித்து பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
இளநிலை மற்றும் முதுநிலை மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு நடத்துதல்:
பொது நுழைவுத் தேர்வுகளுக்கான முன்மொழிவு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பல்வேறு கவலைகளை எழுப்புகிறது. மாநில மற்றும் தேசிய கல்வி வாரியங்களால் வலுவான இறுதித் தேர்வுகள் மூலம் மாணவர்களின் கல்வித்திறன் ஏற்கெனவே முறையாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆதலால் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்துவது என்பது தேவையற்றதும், சுமையாகவும் அமைந்துவிடும்.
நுழைவுத் தேர்வுகள் மாணவர்களிடையே கவலையை ஏற்படுத்துவதுடன் நிதிச்சுமையையும் ஏற்படுத்தி சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். நுழைவுத் தேர்வுகள் கட்டாயமாக்கப்பட்டால், பள்ளிகள் நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சியில் கவனம் செலுத்தக்கூடும். இது பள்ளிக்கல்வியின் செயல்பாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தும். தமிழகத்தின் உயர்கல்வி சேர்க்கை விகிதம்ஏற்கெனவே நாட்டிலேயே முதன்மையாக உள்ளது. எனவே, நுழைவுத் தேர்வுகள் நிச்சயமாக பின்தங்கிய மாணவர்களின் உயர்கல்விக்கான சேர்க்கையைக் குறைத்துவிடும்.
நாட்டிலுள்ள மாறுபட்ட கல்வி முறைகள் மற்றும் அமைப்புகளைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் ஒரே விதமான நுழைவுத் தேர்வு என்பது நடைமுறைக்கு ஒவ்வாது. இது மாநில சுயாட்சியை குறைத்து மதிப்பிடும் வகையில் அமைந்துள்ளது. மாணவர்கள் தங்கள் மேல்நிலைப்பள்ளி பாடப்பிரிவைப் பொருட்படுத்தாமல் எந்தவொரு பட்டப்படிப்பையும் தொடர அனுமதிக்கும் முறை என்பது போதுமான அடிப்படை பாட அறிவு இல்லாமல் உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்குத் தேவையற்ற கல்வி அழுத்தத்தை உருவாக்கும். எனவே, மேற்கூறிய காரணங்களுக்காக, இளங்கலை, முதுகலை சேர்க்கைகள் தனி நுழைவுத் தேர்வைவிட பள்ளி இறுதித் தேர்ச்சி மற்றும் இளங்கலை மதிப்பெண்களின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
4 வருட (கலை மற்றும் அறிவியல்) பட்டம் பெற்றவர்கள், எம்.டெக், எம்.இ. பட்டப்படிப்பில் சேர்க்கை பெறத் தகுதி 4 ஆண்டு கலை மற்றும் அறிவியல் இளங்கலை பட்டம் பெற்ற மாணவர்களை எம்.டெக், அல்லது எம்.இ. படிப்புகளைத் தொடர அனுமதிப்பது கவலையளிக்கிறது. அடிப்படை பொறியியல் குறித்த அடித்தளம் இல்லாமல், மாணவர்கள் முதுகலை பொறியியல் படிப்புகளில் சிரமப்படலாம், மேலும் இதுபோன்ற புதிய ஏற்பாட்டுக்கான தேவையைக் குறித்து கவனமாக மறு ஆய்வு செய்யவேண்டும்.
பல நுழைவு மற்றும் பல வெளியேறும் அமைப்பு என்பதும் பல சிக்கல்களை எழுப்புகிறது, குறிப்பாக, கற்றல் தொடர்ச்சியில் சீர்குலைவு, தற்போதைய அமைப்பு கற்றலின் ஓட்டத்தை உறுதி செய்கிறது, அதனை எம்.இ.எம்.இ. சீர்குலைக்கிறது.பாடத்திட்டத்தில் அவ்வப்போது புதுப்பிப்புகள் ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நுழையும் மாணவர்களுக்கு கடினமாக்கும். எம்.இ.எம்.இ. முறை இடைநிற்றலை சட்டப்பூர்வமாக்குவதுடன், உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் முயற்சிகளை குறைக்கும்.
எம்.இ.எம்.இ. மாதிரி கல்வி திட்டமிடல் மற்றும் வள ஒதுக்கீட்டை சிக்கலாக்குவதன் மூலம் கல்வி நிறுவனங்களை சீர்குலைக்கக்கூடும். வரைவு யுஜிசி (பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை நியமித்தல் மற்றும் பதவி உயர்வு பெறுவதற்கான குறைந்தபட்ச தகுதிகள் மற்றும் உயர்கல்வியின் தரங்களை பராமரிப்பதற்கான நடவடிக்கைகள்) நெறிமுறைகள்-2025ஐப் பொருத்தவரை, ஏற்புடையதாக இல்லை.
கல்வியாளர்கள் அல்லாதவர்களை துணைவேந்தர்களாக நியமித்தல் (பிரிவு 10.1) :
துணைவேந்தர்களை நியமிப்பதற்கான முன்மொழியப்பட்ட அளவுகோல்கள், தொழில்துறை, பொது நிர்வாகம் அல்லது பொதுக் கொள்கையில் அனுபவம் வாய்ந்த நபர்களை உள்ளடக்கியது மிகுந்த கவலைகளை எழுப்புகிறது. கல்வித்துறைக்கு வெளியே தலைமைப் பதவிகளில் அனுபவம் மிக்கவர்களாக இருப்பினும், துணைவேந்தர் பதவிக்கு ஆழ்ந்த கல்வி நிபுணத்துவம் மற்றும் உயர் கல்வி முறை பற்றிய புரிதல் தேவைப்படுகிறது. தற்போது முன்மொழியப்பட்டுள்ள அளவுகோல்கள் பல்கலைக்கழகங்களை திறம்பட வழிநடத்த தேவையான கல்வி மற்றும் நிர்வாக அனுபவம் இல்லாத நபர்களை நியமிக்க வழிவகுக்கும் என்று அஞ்சுகிறோம். கல்வி மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தில் அனுபவம் கொண்ட நபர்களுக்கு முன்னுரிமை அளிக்க அளவுகோல்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
துணைவேந்தர் தேடல் குழுவில் மாநில அரசை நீக்குதல் (பிரிவு 10.1.iv):
மாநில பல்கலைக்கழகங்களின் உள்கட்டமைபை மாநில அரசுகள் முழுமையாக ஏற்படுத்தியுள்ளன. இப்பல்கலைக்கழகங்கள் மாநில அரசுகளால் முழுமையாக நிதியுதவி அளிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன. மாநிலத்தின் உண்மையான விருப்பங்கள், உள்ளூர் மாணவர்களின் கல்வித் தேவைகள், மாநில கொள்கைகள் ஆகியவை உரிய முறையில் பின்பற்றி உறுதி செய்வதற்கு, துணைவேந்தர்களை தேர்வு செய்யும் நடைமுறையில் மாநில அரசின் பங்கேற்பு மிகவும் முக்கியமானது.
மாறுபட்ட பாடப்பிரிவு ஆசிரியர்கள் (பிரிவு 3.2 மற்றும் 3.3):
இளங்கலை அல்லது முதுகலை தகுதியிலிருந்து வேறுபட்ட ஒரு துறையில் முனைவர் பட்டம் பெற்ற ஒரு விண்ணப்பதாரர் அல்லது அவர்களின் கல்வி பின்னணியிலிருந்து வேறுபட்ட பாடத்தில் நெட், செட் தேர்ச்சி பெற்ற ஒருவர் அந்தத் துறையில் கற்பிக்கத் தகுதியுடையவர் என்று வரைவு விதிமுறைகள் முன்மொழிகின்றன. சரியான அடிப்படை பாடப்பிரிவு அறிவு இல்லாமல் பாடங்களை கற்பிக்க தனி நபர்களை அனுமதிப்பது மாணவர்களுக்கு, குறிப்பாக இளங்கலை மற்றும் முதுகலை மட்டங்களில் கற்றல் விளைவுகளுக்கு எதிர்மறையாக அமைந்துவிடும்.
வரைவு விதிமுறைகளில் இதுபோன்ற பல விதிகள் மாநில பல்கலைக்கழகங்களின் கல்வி ஒருமைப்பாடு, தன்னாட்சி மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு கடுமையான சவால்களை ஏற்படுத்தக்கூடும் என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, கல்வி அமைச்சகம் விவாதத்தில் உள்ள வரைவு மசோதாக்களை திரும்பப் பெறவும், இந்தியாவில் உள்ள மாறுபட்ட உயர்கல்வி தேவைகளுடன் சிறப்பாக ஒத்துப்போகும் வகையில் வரைவு விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
எனவே, வரைவு நெறிமுறைகள் திரும்பப்பெறப்பட்டு, மாநிலங்களின், குறிப்பாக தமிழகத்தின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கப்படுவதை உறுதி செய்வதற்கு மத்திய கல்வி அமைச்சரின் ஆதரவை நான் எதிர்பார்க்கிறேன். இந்த வரைவு விதிமுறைகளை எதிர்த்தும், துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான விதிமுறைகள் உட்பட மேற்கண்ட இரண்டு வரைவு விதிமுறைகளையும் உடனடியாக திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்தியும் ஜன.9ம் தேதி அன்று தமிழக சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்தீர்மானத்தின் நகல் ஒன்றினையும் மத்திய கல்வி அமைச்சரின் கனிவான பரிசீலனைக்காகவும், சாதகமான நடவடிக்கைக்காகவும் அனுப்பி வைத்துள்ளேன்’ என்று அந்த கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –20-01-2026
20 Jan 2026 -
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? கவர்னர் மாளிகை அறிக்கை
20 Jan 2026சென்னை, தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றாமல் கவர்னர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்தது குறித்து விளக்கம் அளித்து மக்கள் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் கூட்டணி குறித்து காங்., மேலிடம் முடிவு செய்யும் கிரிஷ் சோடங்கர் பதில்
20 Jan 2026சென்னை, வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும் என்று காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.
-
தொடர்ந்து 4-வது ஆண்டாக வெளிநடப்பு: கவர்னர் அரசமைப்பு சட்டத்தை வேண்டும் என்றே மீறியுள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
20 Jan 2026சென்னை, தமிழக சட்டசபையில் உரையை வாசிக்காமல் தொடர்ந்து 4-வது ஆண்டாக கவர்னர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு சட்டசபைக் கூட்டம் ஜனவரி 24 வரை நடைபெறும் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
20 Jan 2026சென்னை, தமிழக சட்டசபைக் கூட்டம் 24-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவர் நபினுக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு
20 Jan 2026புதுடெல்லி, பா.ஜ.க. தேசிய செயல் தலைவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
-
மீண்டும் புதிய உச்சம் தொட்ட ஒரு பவுன் தங்கத்தின் விலை..! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,600 உயர்வு
20 Jan 2026சென்னை, தங்கம் விலை நேற்று ஒருநாளில் மட்டும் சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்துள்ளது.
-
இன்று த.வெ.க. தேர்தல் பிரச்சார குழுவின் ஆலோசனைக் கூட்டம்
20 Jan 2026சென்னை: த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- அனைவருக்கும் வணக்கம்.
-
முதல்வரின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு: சட்டப்பேரவையிலிருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு
20 Jan 2026சென்னை, முதல்வரின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையிலிருந்து அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
கவர்னர் உரையின் முக்கிய அம்சங்கள்:
20 Jan 2026சட்டசபையில் கவர்னர் உரையை சபாநயகர் அப்பாவு தமிழில் வாசித்தார். அதில் இடம்பெற்றிருந்த முக்கிய அம்சங்கள் வருமாறு:
-
படத்தைப் பார்த்தார்கள்? ஜனநாயகன் வழக்கில் நீதிபதிகள் கேள்வி
20 Jan 2026சென்சார் போர்டில் யார்
-
நாங்கள் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம்: செங்கோட்டையன் பரபரப்பு விளக்கம்
20 Jan 2026சென்னை, நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம் என்று தமிழக வெற்றிக்கழகத்தில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று தகவல் வெளியான நிலையில் செங்கோட்டையன்
-
அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாகும்: பிரதமர் மோடி பேச்சு
20 Jan 2026புதுடெல்லி, இந்தியா அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த நாடாக உருவாகும் என்று பிரதமர் மோடி பேசினார்.
-
மாநில கவர்னர் உரை தேவையில்லை என பார்லி.யில் அரசியலமைப்பு திருத்தத்தை கோருவோம்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
20 Jan 2026சென்னை, இந்தியா முழுவதும் இருக்கும் ஒத்த கருத்துகளைக் கொண்ட அரசியல் கட்சிகள் துணையோடு கவர்னர் உரை தேவையில்லை என பாராளுமன்றத்தில் அரசியலமைப்புத் திருத்தம் கோருவோம் என்று
-
தணிக்கை சான்று விவகாரத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் குற்றச்சாட்டு
20 Jan 2026சென்னை, தணிக்கை சான்று விவகாரத்தில் வெளிப்படை தன்மை இல்லை என்று ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் குற்றச்சாட்டியுள்ளது.
-
தே.ஜ.கூட்டணியில் டி.டி.வி.தினகரன், பிரேமலதாவை இழுக்க இறுதி முயற்சி
20 Jan 2026சென்னை: அ.ம.மு.க., தே.மு.தி.க.
-
போட்டியின்றித் தேர்வு: பா.ஜ. புதிய தேசிய தலைவராக பொறுப்பேற்றார் நிதின் நவீன்
20 Jan 2026புதுடெல்லி, பா.ஜ.க. கட்சியின் புதிய தேசிய தலைவராக நிதின் நவீன் தில்லியில் உள்ள அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
-
மரியாதை - நன்றிக்கு தகுதியானவர்: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக கனிமொழி எம்.பி. கருத்து
20 Jan 2026சென்னை, நாட்டின் இசையை உலகளாவிய மேடைகளுக்கு எடுத்துச் சென்றவர் ஏ.ஆர்.ரஹ்மான் என்று தெரிவித்துள்ள கனிமொழி எம்.பி., ஏ.ஆர்.ரஹ்மான் வெறுப்பை அல்ல, மரியாதையையும் நன்றியையும்
-
ஆபாச வீடியோ விவகாரம்; கர்நாடக டி.ஜி.பி. சஸ்பெண்டு பெங்களூரு, ஆபாச வீடியோ விவகாரம்; நடிகை ரன்யாவின் வளர்ப்பு தந்தையான கர்நாடக டி.ஜி.பி. சஸ்பெண்டு
20 Jan 2026கர்நாடகாவில் சிவில் உரிமைகள் அமலாக்க இயக்குநரகத்தின் டி.ஜி.பி.யாக இருப்பவர் ராமச்சந்திர ராவ்.
-
சபரிமலை தங்கம் திருட்டு விவகாரம்: அமலாக்கத்துறை விசாரணை தீவிரம் சென்னையில் பல்வேறு இடங்களில் சோதனை
20 Jan 2026திருவனந்தபுரம், சபரிமலை தங்கம் திருட்டு விவகாரத்தில் அமலாக்கத்துறை சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று சோதனை நடத்தியது.
-
கவர்னரின் வெளிநடப்பால் அரசின் 4 ஆண்டுகள் சாதனைகளை மறைத்து விட முடியாது: முதல்வர்
20 Jan 2026சென்னை, கவர்னர் வெளிநடப்பால் தமிழக அரசின் 4 ஆண்டுகள் சாதனைகளை மறைத்து விட முடியாது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண கூட்டு பணி குழுவை மீண்டும் உயிர்ப்பித்திட தமிழ்நாடு கவர்னர் உரையில் வலியுறுத்தல்
20 Jan 2026சென்னை, தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண கூட்டு பணி குழுவை மீண்டும் உயிர்பித்திட வேண்டும் என்று கவர்னர் உரையில் வலியுறுத்தப்பட்டது.
-
வரும் 26-ம் தேதி குடியரசு தின கொண்டாட்டம்: 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு
20 Jan 2026புதுடெல்லி, வரும் 26-ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள 10 ஆயிரம் பேருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
உரையின் முக்கிய பகுதிகளை தவிர்த்த கேரள மாநில கவர்னர் முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு
20 Jan 2026திருவனந்தபுரம், கேரள சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் நேற்று (ஜனவரி 20, 2026) தொடங்கியது.
-
234 தொகுதிகளிலும் நானே நிற்பதாக நினைத்து வரும் தேர்தலில் 100 சதவீதம் களப்பணியாற்ற வேண்டும் மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
20 Jan 2026சென்னை: 234 தொகுதிகளிலும் நானே நிற்பதாக நினைத்து தேர்தலில் 100 சதவீதம் களப்பணியாற்ற வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.


