முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவுகள் 2026 சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் கருத்து

சனிக்கிழமை, 8 பெப்ரவரி 2025      தமிழகம்
Electronic-Machine 2023-10-

Source: provided

ஈரோடு: “இந்த தேர்தல் முடிவுகள் தான் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும். ஈரோடு கிழக்கு தொகுதியில், முக்கிய எதிர்க்கட்சி போட்டியிடவில்லை. எனவே, தி.மு.க. வுக்கு எதிரான வாக்குகள் நா.த.க. வுக்கு கிடைத்துள்ளன” என்று ஈரோடு கிழக்கு தொகுதி தி.மு.க.  வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு வாக்கு எண்ணிக்கை மையத்தில் தி.மு.க.  வேட்பாளர் வி.சி.சந்திரகுமார்  நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “இந்த வெற்றிக்கு காரணம், தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து கூறிவருவது போல, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் தான். இந்த தேர்தல் முடிவுகள் தான் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும்.

ஈரோடு கிழக்கு தொகுதியில், முக்கிய எதிர்க்கட்சி போட்டியிடவில்லை. எனவே, அவர்களுடைய வாக்குகள் நோட்டாவுக்கு விழுந்துள்ளன. 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.  மிகப் பெரிய வெற்றி பெறும் என்பதற்கு அச்சாரமாக தி.மு.க.  ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி அமைந்துள்ளது. மக்களை நேரடியாக தேர்தலை சந்தித்தது வாக்கு சேகரித்தோம்.   எனவே, தோல்வியடைந்த எதிர்க்கட்சி வேட்பாளர் முன்வைக்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது. முக்கிய எதிர்க்கட்சி போட்டியிடாததால் எங்களுக்கு எதிரான வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு சென்றுள்ளது. தி.மு.க.  எந்தக் காலத்திலும் யாரை கண்டும் பயப்படாது,” என்று அவர் கூறினார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி கூறும்போது, “நாம் தமிழர் கட்சிக்கு பின்னடைவு கிடையாது. கடந்த இடைத்தேர்தல்,  பாராளுமன்ற தேர்தலை விட கூடுதலான வாக்குகளைப் பெற்று வருவதால், இது பின்னடைவு கிடையாது. 2026-ம் ஆண்டு தி.மு.க. வுக்கு நிச்சயமாக பின்னடைவு ஏற்படுத்தப்படும்.

நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்துள்ள வாக்குகள் ஒருபோதும் எதிர்காலத்தில் வேறு கட்சிக்கு போகாது. தி.மு.க. வுக்கு எதிரான வாக்குகளும், நாம் தமிழர் கட்சிக்கு விழுந்துள்ளன. பெரியார் குறித்து சீமான் விமர்சனம் செய்ததால் வாக்குகள் குறையவில்லை. பெரியார் குறித்து சீமான் பேசியது புரிதல் அடிப்படையில் சரியாக இருப்பதால் தான் நாம் தமிழர் கட்சிக்கு வாக்குகள் விழுந்துள்ளன. நாம் தமிழர் கட்சி மக்களை நம்பிக்கை வைத்து தேர்தலில் நின்றது,” என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து