எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடில்லி, டெல்லி சட்டப்பேரவை தோ்தலில் ஆட்சியமைக்கத் தகுதி பெற்றுள்ள பா.ஜ.க. 48 தொகுதிகளிலும், ஆட்சியைப் பறிகொடுத்த ஆம் ஆத்மி கட்சி 22 தொகுதிகளிலும் வென்றுள்ளன. ஆம் ஆத்மியின் அமைப்பாளா் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, சத்யேந்தா் ஜெயின், செளரவ் பரத்வாஜ் உள்ளிட்ட முக்கியத் தலைவா்கள் பலரும் அதிா்ச்சித் தோல்வி அடைந்தனா்.
2020 தோ்தலில் எட்டு இடங்களில் மட்டுமே வென்ற பா.ஜ.க. , இம்முறை கூடுதலாக 40 இடங்களில் வென்றுள்ளது. 2015-இல் 67 இடங்களிலும் 2020-இல் 62 இடங்களிலும் பெரும்பான்மை பலத்துடன் வென்ற ஆம் ஆத்மி கட்சி, இம்முறை 22 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
முதல்வா் அதிஷி, அமைச்சா்கள் கோபால் ராய், இம்ரான் ஹுசேன், முகேஷ் குமாா் அலாவத் ஆகியோா் தங்களின் தொகுதிகளில் வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டனா்.
புது டில்லி: இங்கு முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பா.ஜ.க. வேட்பாளா் பா்வேஷ் சாஹிப் சிங்கிடம் 4,089 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றாா். இந்தத் தொகுதியில் கடந்த 2013 முதல் தொடா்ந்து ஷீலா தீட்சித்தை தோற்கடித்தவா் கெஜ்ரிவால். இம்முறை இங்கு களம் கண்ட ஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப் தீட்சித்தும் இங்கு பா.ஜ.க. விடம் தோல்வியைத் தழுவினாா்.
கால்காஜி: இத்தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளா் ரமேஷ் பிதூரியை விட 3,521 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தக்க வைத்துக்கொண்டாா் முதல்வா் அதிஷி. இத்தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் அல்கா லாம்பா களம் கண்டாா். முந்தைய தோ்தலில் தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளா் தரம்பீா் சிங்கை விட 11,393 வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தாா் அதிஷி.
சுல்தான்பூா் மஜ்ரா: டில்லி அமைச்சா் முகேஷ் குமாா் அலாவத், 17,126 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டாா். அவருக்கு எதிராக பா.ஜ.க. சாா்பில் கரம் சிங் கா்மாவும், காங்கிரஸ் சாா்பில் ஜெய் கிஷணும் போட்டியிட்டனா். 2020 தோ்தலில் பா.ஜ.க. வின் ராம் சந்தா் செளரியாவை 48,052 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவா் முகேஷ் குமாா் அலாவத்.
பல்லிமாரன்: இத்தொகுதியில் டில்லி அமைச்சா் இம்ரான் ஹுசேன், தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க. வின் கமல் பாக்ரியை விட 29,823 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். 2015, 2020 ஆண்டுகளில் நடந்த தோ்தலிலும் அவா் இதே தொகுதியில் வெற்றி பெற்றாா்.
கிரேட்டா் கைலாஷ்: டில்லி சுகாதாரத் துறை அமைச்சா் செளரவ் பரத்வாத், பா.ஜ.க. வின் ஷிகா ராயிடம் 3,188 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றாா். இத்தொகுதியில் 2013, 2015, 2020 ஆகிய தோ்தல்களில் வென்றிருந்தாா் செளரவ் பரத்வாஜ்.
ஷகுா் பஸ்தி: முன்னாள் அமைச்சரும் ஆம் ஆத்மி மூத்த தலைவருமான சத்யேந்தா் ஜெயின், பா.ஜ.க. வின் கா்னைல் சிங்கிடம் 20,998 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா். இவரும் 2013, 2015, 2020 தோ்தல்களில் இதே தொகுதியில் வெற்றி பெற்றவா்.
காரவால் நகா்: பா.ஜ.க. வின் கபில் மிஸ்ரா, ஆம் ஆத்மி வேட்பாளா் மனோஜ் தியாகியை 23,355 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினாா். 2015-இல் இதே தொகுதியில் ஆம் ஆத்மி சாா்பில் போட்டியிட்டு வென்ற கபில் மிஸ்ரா, சமீபத்திய சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக பா.ஜ.க. வில் சோ்ந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோஹிணி: பா.ஜ.க. வின் விஜேந்தா் குப்தா இத்தொகுயில் 37,816 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மி வேட்பாளா் பா்தீப் மித்தலை வீழ்த்தி தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டாா். 2015, 2020 தோ்தல்களிலும் இத்தொகுதியில் விஜேந்தா் குப்தா வென்றிருந்தாா்.
பட்கா்கஞ்ச்: பா.ஜ.க. வேட்பாளா் ரவீந்தா் சிங் நேகி, ஆம் ஆதமி கட்சியில் புதிதாக சோ்ந்த அவத் ஓஜாவை 28,072 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினாா். இத்தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் களம் கண்ட அனில் செளத்ரி 16,549 வாக்குகளைப் பெற்றாா். 2013, 215, 2020 ஆகிய தோ்தல்களில் தொடா்ந்து வெற்றி பெற்ற முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா இம்முறை ஜங்புராவுக்கு சென்றதையடுத்து இங்கு போட்டியிடும் வாய்ப்பு புதியவரவான அவாத் ஓஜாவுக்கு கிடைத்தது.
ஜங்புரா: இத்தொகுதியில் முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா பா.ஜ.க. வின் தா்வீந்தா் சிங் மாா்வாவிடம் 675 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினாா். 2013-ஆம் ஆண்டு முதல் இத்தொகுதியை ஆம் ஆத்மி கட்சி தக்க வைத்து வந்தது.
சாந்தினி செளக்: இங்கு ஆம் ஆத்மியின் புனா்தீப் சிங் சாஹ்னே 17,126 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளா் சதீஷ் ஜெயினை வீழ்த்தினாா். இங்கு 2013-இல் காங்கிரஸின் பா்லாத் சிங் சாஹ்னே வெற்றி பெற்றாா். 2015-இல் தற்போது காங்கிரஸில் உள்ள அல்கா லங்ம்பா ஆம் ஆத்மி சாா்பில் போட்டியிட்டு இங்கு வெற்றி பெற்றாா். 2020-இல் ஆம் ஆத்மியின் பா்லாத் சிங் சாஹ்னே இங்கு வெற்றி பெற்றாா்.
ஓக்லா: இத்தொகுதியின் எம்எல்ஏவான அமானத்துல்லா கான், பா.ஜ.க. வேட்பாளா் மனீஷ் செளத்ரியை விட 23,639 வாக்குகள் கூடுதலாகப் பெற்று தொகுதியை தக்க வைத்துக் கொண்டாா். 2015 முதல் இத்தொகுதியை தொடா்ந்து இவா் தன்வசத்தில் வைத்துள்ளாா்.
பிஜ்வாசன்: முன்னாள் அமைச்சா் கைலாஷ் கெலோட் டில்லி தோ்தலுக்கு முன்பாக பா.ஜ.க. வில் சோ்ந்து இத்தொகுதியில் களம் கண்டு 11,276 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா். இங்கு காங்கிரஸின் தேவிந்தா் குமாா் செஹ்ராவத்தும் ஆம் ஆத்மியின் சுரேந்தா் பரத்வாஜும் களத்தில் இருந்தனா். பாத்லி: இங்கு பா.ஜ.க. வின் ஆஹிா் தீபக் செளத்ரி, டில்லி காங்கிரஸ் தலைவா் தேவேந்தா் யாதவை 15,163 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளாா். ஆம் ஆத்மியின் அஜேஷ் யாதவும் இங்கு களத்தில் இருந்தாா்.
கரோல் பாக்: ஆம் ஆத்மியின் விசேஷ் ரவி 2013 முதல் இங்கு சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளாா். இத்தோ்தலில் பா.ஜ.க. வின் தேசிய பொதுச்செயலரும் தலித் சமூகத் தலைவருமான துஷ்யந்த் கெளதமை 7,430 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளாா்.
பாபா்பூா்: டில்லி அமைச்சா் கோபால் ராய், பா.ஜ.க. வின் அனில் குமாா் வசிஷ்தை விட 18,994 வாக்குகள் கூடுதலாகப் பெற்று 2015, 2020 ஆண்டுகளைப் போலவே இத்தொகுதியைத் தக்க வைத்துள்ளாா். இவரை எதிா்த்து காங்கிரஸ் சாா்பில் முகம்மது இஷ்ரக் கான் களத்தில் இருந்தாா்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
வைத்திலிங்கம் ராஜினாமா எதிரொலி: தமிழ்நாட்டில் எம்.எல்.ஏ. காலியிடம் 5 ஆக உயர்வு
21 Jan 2026சென்னை, தமிழக சட்டசபைக்கு அடுத்த 2 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வைத்திலிங்கம் ராஜினாமா: எம்.எல்.ஏ. காலியிடம் 5 ஆக உயர்ந்துள்ளது.
-
பிரான்ஸ் அதிபர் பதவியில் இருந்து மேக்ரான் விரைவில் நீக்கப்படுவார்: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேச்சு
21 Jan 2026வாஷிங்டன், அமைதி வாரியத்தில் இணையாவிட்டால் 200 சதவீதம் வரி விதிப்போம் என்று பிரான்சுக்கு அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
-
தி.மு.க.வில் இணைந்தது ஏன்? வைத்திலிங்கம் விளக்கம்
21 Jan 2026சென்னை, ஓ பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
-
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம் ஒரேநாளில் ரூ.4,120 அதிகரிப்பு
21 Jan 2026சென்னை, தங்கம் விலை நேற்று புதிய உச்சத்தை தொட்டு விற்பனையானது.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த டி.டி.வி.தினகரன்-இ.பி.எஸ். சந்திப்பார்களா..?
21 Jan 2026சென்னை, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை டி.டி.வி.தினகரன் சந்தித்து கூட்டணியில் இணைந்திருப்பது அரசியலில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
-
தே.மு.தி.க. யாருடன் கூட்டணி? பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
21 Jan 2026சென்னை, தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்பது குறித்து பிரேமலதா விஜயகாந்த் விளக்கமளித்துள்ளார்.
-
தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே த.வெ.க.வுக்கு பொதுச்சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்க வாய்ப்பு
21 Jan 2026புதுடெல்லி, தேர்தல் ஆணையத்திடம் த.வெ.க. அளித்த விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளதால் கட்சிக்கு பொதுச் சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
தவறாக மந்திரம் புரோகிதர்: சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ குறித்து அரசு விளக்கம்
21 Jan 2026சென்னை, கிளி ஜோசியர் புரோகிதம் ஓதியது போன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ குறித்து தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
-
சூர்யவன்ஷி சாதனை முறியடிப்பு
21 Jan 2026மெல்போர்ன்: இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஆஸி., வீரர் மலாஜ்சுக் 51 பந்துகளில் அதிவேக சதத்தை பதிவு செய்து 52 பந்தில் இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி சதம் அடித்
-
கூட்டணிக்கு வரவேற்று வாழ்த்திய இ.பி.எஸ்.க்கு டி.டி.வி.தினகரன் நன்றி
21 Jan 2026சென்னை, கூட்டணிக்கு மனதார வரவேற்று வாழ்த்திய இ.பி.எஸ்.க்கு டி.டி.வி.தினகரன் நன்றி தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசு ஊழியர்கள் மீதான ஊழல் வழக்கை மாநில காவல்துறையும் விசாரிக்கலாம்:
21 Jan 2026மத்திய அரசு ஊழியர்கள் மீதான ஊழல் வழக்கை இனி மாநில காவல்துறையும் விசாரிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
பிரதமர் மோடி வருகை எதிரொலி: செங்கல்பட்டில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை
21 Jan 2026செங்கல்பட்டு, பிரதமர் வருகையையொட்டி கிண்டி, மீனம்பாக்கம் ஆகிய பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
-
தேர்தலில் யாருடன் கூட்டணி: ராமதாஸ் திடீர் ஆலோசனை
21 Jan 2026சென்னை, சட்டசபை தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து தேர்தல் கூட்டணி குறித்து ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.
-
பா.ஜ.க.வில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை: காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு
21 Jan 2026புதுடெல்லி, பா.ஜ.க.வில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை, நிதின் நபீன் தலைவரானது குறித்து காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டியுள்ளது.
-
கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய வலிபர் தற்கொலை சம்பவத்தில் பெண் கைது
21 Jan 2026திருவனந்தபுரம், கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய வலிபர் தற்கொலை சம்பவத்தில் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
மீண்டும் கூட்டணிக்குள் டி.டி.வி.தினகரன்: மூத்த நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்திய இ.பி.எஸ்.
21 Jan 2026சென்னை, தே.ஜ.கூட்டணியில் மீண்டும் டி.டி.வி.தினகரன் இணைந்துள்ள நிலைியல் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.
-
அதிபர் ட்ரம்ப்பின் அமைதி வாரியத்தில் இணைய இஸ்ரேல் உள்ளிட்ட இதுவரை 8 நாடுகள் ஒப்புதல்
21 Jan 2026ஜெருசலேம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அமைதி வாரியத்தில் இணைய இஸ்ரேல் உள்ளிட்ட இதுவரை 8 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.
-
கரீபியன் கடலில் சென்றுகொண்டிருந்த கச்சா எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்த அமெரிக்கா
21 Jan 2026வாஷிங்டன், கரீபியன் கடலில் சென்றுகொண்டிருந்த கச்சா எண்ணெய் கப்பலை அமெரிக்கா பறிமுதல் செய்துள்ளது.
-
இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: ஐரோப்பிய யூனியன் தலைவர் உருலா தகவல்
21 Jan 2026டாவோஸ், இந்தியாவுடன் விரைவில் வர்த்த ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக ஐரோப்பிய யூனியன் தலைவர் உருலா வென் டர் லியன் தெரிவித்துள்ளார்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார் டி.டி.வி.தினகரன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவிப்பு
21 Jan 2026சென்னை, தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி.தினகரன் இணைந்துள்ளதாக மத்திய அமைச்சரும், தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
-
அசாமில் மீண்டும் வன்முறை: ஒருவர் உயிரிழப்பு-செல்போன், இணையதள சேவை துண்டிப்பு
21 Jan 2026கவுகாத்தி, அமாமில் மீண்டும் வன்முறை சம்பவம் நடைபெற்றதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் அங்கு செல்போன், இணையதள சேவை துண்டிக்கப்பட்டது.
-
தே.ஜ. கூட்டணியில் இணைந்த டி.டி.வி.தினகரனுக்கு இ.பி.எஸ். வரவேற்பு
21 Jan 2026சென்னை, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க.
-
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை படுகொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
21 Jan 2026டோக்கியோ, ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை படுகொலை செய்த யமகாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவின் வளர்ச்சி பாதையில் திரிபுரா பெரும் பங்கு வகிக்கிறது பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
21 Jan 2026புதுடெல்லி, இந்தியாவின் வளர்ச்சி பாதையில் திரிபுரா மாநிலம் பெரும் பங்கு வகிக்கிறது என்று அம்மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.&n
-
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 7 தமிழ்நாடு மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை
21 Jan 2026சென்னை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 7 தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.


