எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : 6 மாதத்தில் 87 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவை கூட்டம், நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்தது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமுதா ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
அமைச்சர் கூறியதாவது: சென்னையைச் சுற்றியுள்ள பெல்ட் ஏரியா எனப்படும் 4 மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் 32 கி.மீ., தொலைவுக்குள் ஆக்கிரமிப்பு செய்து நீண்ட ஆண்டுகளாக பட்டா பெற முடியாமல் வசித்து வருபவர்களுக்கு பட்டா வழங்குவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. சென்னையில் மட்டும் 29,187 பேர் ஆட்சேபனை இல்லாத புறம்போக்குகளில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு எல்லாம் 6 மாதத்திற்கு பட்டா வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக மாவட்ட மற்றும் மாநில அளவிலான ஒரு குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளார். சென்னையை சுற்றியுள்ள 4 மாவட்ட மக்களுக்கு இது வரப்பிரசாதமாகும். மதுரை, நெல்லை போன்ற பிற மாநகராட்சிகளிலும் இது போன்ற பிரச்னைகள் நிலவுகிறது. மாநகராட்சி, நகராட்சி, மாவட்ட தலைநகர் பகுதிகளில் வசிக்கும் 57,084 பேருக்கும் பட்டா வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
ஏறத்தாழ 86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கும் தீர்மானத்தை இன்றைய அமைச்சரவையில் முடிவெடுத்து, 6 மாதத்தில் வழங்க உத்தரவிட்டுள்ளார். இதில், பட்டா கோரி விடுபட்டவர்கள் விண்ணப்பித்தால், அதனையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. 10 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு இதுவரையில் பட்டா வழங்கியுள்ளோம். 6 லட்சத்து 29 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கும் பணியும் செய்து வருகிறோம்.
அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பட்டா கோரி விண்ணப்பிக்கலாம். தேவைப்பட்டால், தாலுகா வாரியாக முகாம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, இதுகுறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், "ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு! சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களின் “பெல்ட் ஏரியாக்களில்” ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்துவரும் 29,187 பேர், மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிகள் - நகராட்சிகள் - மாவட்டத் தலைநகரப் பகுதிகளில் 57,084 பேர் என மொத்தம் 86 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்குப் பட்டா வழங்க இன்றைய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கியுள்ளோம். 6 மாதங்களில் இதனைச் செய்து முடிக்க இரண்டு குழுக்களையும் அமைக்கவுள்ளோம். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 12,29,372 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன!" என்று பதிவிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 3 weeks ago |
-
தொகுதி மறுவரையறை ஆலோசனை கூட்டம்: பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி பங்கேற்பு
21 Mar 2025சென்னை, சென்னையில் இன்று நடைபெறும் தொகுதி மறுவரையறை கூட்டத்தில் ஜனசேனை கட்சி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
வாடிக்கையாளர் மடியில் கொட்டிய டீக்கு 431 கோடி ரூபாய் இழப்பீடு : ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு கோர்ட் உத்தரவு
21 Mar 2025வாஷிங்டன் : வாடிக்கையாளர் மடியில் கொட்டிய டீக்கு ரூ.431 கோடி இழப்பீடு வழங்க ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அ.தி.மு.க. ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துகள்: தங்கமணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்
21 Mar 2025சென்னை, அ.தி.மு.க. ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துகள் என்று தங்கமணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசினார்.
-
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டம்: பல்வேறு மாநில அரசியல் தலைவர்கள் வருகை
21 Mar 2025சென்னை, தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங
-
திருச்சியில் ரூ. 235 கோடி மதிப்பில் 7 தளங்களுடன் 'கலைஞர் நூலகம்' முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
21 Mar 2025சென்னை, திருச்சியில் 7 தளங்களுடன் 235 கோடி ரூபாய் மதிப்பிலான கலைஞர் நூலக கட்டிடத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான வழக்கு; விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
21 Mar 2025புதுடெல்லி, ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான பொதுநல வழக்கை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
-
தொகுதி மறுவரையறை தொடர்பான இன்றைய கூட்டத்தில் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிறோம்: வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
21 Mar 2025சென்னை, தொகுதி மறுவரையறை தொடர்பான இன்றைய கூட்டத்தில் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிறோம் என்று வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
-
நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு
21 Mar 2025சென்னை : நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
-
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த மத்திய அரசு ஊழியர் கைது
21 Mar 2025பெங்களூரு : பாகிஸ்தானில் உளவு பார்த்த மத்திய அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
-
கன மழை எச்சரிக்கை எதிரொலி: இன்றைய ஐ.பி.எல். போட்டி திட்டமிட்டப்படி நடக்குமா?
21 Mar 2025கொல்கத்தா : கொல்கத்தாவில் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், ஐ.பி.எல்.
-
பிரமாண்ட கலைநிகழ்சிகளுடன் ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இன்று கோலாகலமாக ஆரம்பம்
21 Mar 2025கொல்கத்தா : ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் பிரமாண்ட கலைநிகழ்சிகளுடன் கொல்கத்தாவில் இன்று தொடங்குகிறது.
-
சென்னை மாநகராட்சிக்கு ரூ.350 கோடியை மத்திய அரசு வழங்கவில்லை - மேயர் பிரியா
21 Mar 2025சென்னை : சென்னை மாநகராட்சிக்கு ரூ. 350 கோடியை மத்திய அரசு வழங்கவில்லை என்று மேயர் பிரியா குற்றச்சாட்டியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-03-2025.
22 Mar 2025 -
சென்னை சாலைக்கு அஸ்வின் பெயர் சூட்ட முடிவு
21 Mar 2025சென்னை : சென்னையில் உள்ள ஒரு சாலைக்கு இந்திய வீரர் அஸ்வின் பெயரை சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுழற்பந்து ஜாம்பவான்...
-
தமிழகத்தில் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
21 Mar 2025சென்னை, தமிழகத்தில் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
38 வெளிநாட்டு பயணங்கள்: பிரதமா் மோடியின் அரசுமுறை பயண செலவு 259 கோடி ரூபாய்
21 Mar 2025டெல்லி : 2022-ம் ஆண்டு முதல் பிரதமா் மேற்கொண்ட அரசு பயணங்களுக்கு ரூ.259 கோடி செலவானதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை தள்ளிவைப்பு
21 Mar 2025சுல்தான்பூர், ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஏப்ரல் 3-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
-
எங்கள் கணக்கை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்: அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி
21 Mar 2025சென்னை : எங்கள் கணக்கை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று தங்கம் தென்னரசுக்கு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
கோவையில் ரூ.71 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்
21 Mar 2025கோவை : கோவை-பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் ஹவாலா பணம் ரூ.71 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
-
கர்நாடகாவில் எம்.எல்.ஏக்களின் சம்பளம் இரு மடங்காக உயர்வு
21 Mar 2025பெங்களூரு : கர்நாடகாவில் எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் இரு மடங்காக உயர்த்தப்பட்டது.
-
இந்தியர்களுக்கு கைவிலங்கு: பாராளுமன்றத்தில் மத்திய அரசு பதில்
21 Mar 2025டெல்லி, இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்ட விவகாரம் பாராளுமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
-
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
21 Mar 2025சியோல் : வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.
-
விதிமுறைகளில் பி.சி.சி.ஐ. மாற்றம்: ஐ.பி.எல். அணி கேப்டன்கள் நிம்மதி
21 Mar 2025மும்பை : விதிமுறையில் பி.சி.சி.ஐ. மாற்றம்: செய்துள்ளதை அடுத்து ஐ.பி.எல். அணி கேப்டன்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
-
கடினமான காலங்களில் விராட் நிறைய ஆதரவளித்தார்: முகமது சிராஜ் உருக்கம்
21 Mar 2025காந்திநகர் : கடின காலங்களில் விராட் கோலி தனக்கு ஆதரவு கொடுத்ததாக முகமது சிராஜ் கூறியுள்ளார்.
தீவிர பயிற்சி...
-
நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டி: பாகிஸ்தான் அணி இமாலய வெற்றி
21 Mar 2025ஆக்லாந்து : நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.