முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் வியூக மன்னா்களால் பயனில்லை: விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து அமைச்சர் சேகர்பாபு கருத்து

செவ்வாய்க்கிழமை, 11 பெப்ரவரி 2025      தமிழகம்
Sekar-Babu 2023-04-20

Source: provided

சென்னை : தேர்தல் வியூக மன்னா்களால் எவ்வளவு தூரம் பயனிருக்கும் என்பது தெரியவில்லை என்று த.வெ.க.  தலைவர் விஜய் -  பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்த கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துள்ளார்.

சென்னையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று (பிப்.11) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது  அவர் கூறுகையில், , “முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எழுப்பிய கேள்விக்கு,  எடப்பாடி பழனிசாமி  தான் பதில் அளிக்க வேண்டும்.  அந்தந்த இயக்கங்களில் உருவாகும் பிரச்சினைகளை அவரவர் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். அடுத்த கட்சி விவகாரங்களில் தலையிடுவதை எங்கள் தலைவர் எப்போதுமே விரும்பமாட்டார். வடலூரில்  ஜோதி தரிசனம் அனைத்து மக்களுக்கும் தெரியவேண்டும் என்பதற்காக, வளர்ந்திருந்த கிளைகளைத்தான் ஒழுங்குப்படுத்தினோம். மரங்கள் எதுவும் வெட்டப்படவில்லை. மரங்கள் வெட்டப்பட்டதற்கு ஆதாரங்கள் இருந்தால்  அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.  மதுரை தண்டாயுதபாணி சுவாமி கோயில் விவகாரத்தில்  கோயில் செயல் அலுவலர் மீது  தவறிருக்கும் பட்சத்தில் அவர்  மீதுநடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

த.வெ.க.  தலைவர் விஜய், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “மக்களின் அன்பை பெற்றவர்கள், மக்களோடு பயணிப்பவர்களுக்கு, தேர்தல் வியூக மன்னர்களால் எவ்வளவு தூரம் பயனிருக்கும் என்பது தெரியவில்லை. எங்களைப் பொறுத்தவரையில், நாங்கள் மக்களோடு கூட்டணியை வைத்துள்ளோம்” என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து