Idhayam Matrimony

ஆந்திராவில் ரூ.1.3 லட்சம் கோடியில் ஏ.ஐ. மையம்: கூகுள் நிறுவனம் தகவல்

செவ்வாய்க்கிழமை, 14 அக்டோபர் 2025      இந்தியா
Google 2023-11-28

விசாகப்பட்டினம், ஆந்திராவில் ரூ.1.3 லட்சம் கோடியில் ஏ.ஐ. மையம் அமைக்க உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனங்களில் ஒன்றான கூகுள், இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் முதலீடு செய்ய உள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரூ.1.3 லட்சம் கோடியில் ஏ.ஐ. மையம் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்திய இளைஞர்களின் திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்புக்கு கூகுளின் ஏ.ஐ. மையம் உதவும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கு வெளியே கூகுள் நிறுவனம் செய்யக்கூடிய மிகப்பெரிய முதலீடு இதுதான் என்று சொல்லப்படுகிறது. ஆந்திராவில் ஏற்கனவே அதானி குழுமம் ரூ.18,900 கோடியும், எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ரூ. 5,001 கோடியும் முதலீடு செய்வதாக அறிவித்துள்ள நிலையில், ஆந்திராவிற்கு மேலும் ஒரு ஜாக்பாட்டாக கூகுள் நிறுவனத்தின் முடிவு அமைந்துள்ளது.

உலகளவில் அனைத்துத் துறைகளிலும் ஏ.ஐ. பயன்பாடு அதிகரித்து வரும்நிலையில், ஏ.ஐ. குறித்த ஆராய்ச்சியில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களின் முழுக் கவனத்தையும் செலுத்தி வருகின்றன.இந்த நிலையில்தான், இந்தியாவில் தனது தரவு மையத்துக்கான முதலீட்டை கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து