முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லை ஓட்டலில் ரூ.1 லட்சம் திருடிய ஊழியருக்கு 2 ஆண்டு சிறை

செவ்வாய்க்கிழமை, 18 மார்ச் 2025      தமிழகம்
Jail 2024-05-01

Source: provided

நெல்லை: நெல்லை தாழையூத்து அருகே ஓட்டலில் திருடிய ஊழியருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து அருகே பூந்தோட்ட தெருவை சேர்ந்த செல்லதுரை (வயது 48) என்பவர் தாழையூத்து பஸ் ஸ்டாப் அருகே ஹோட்டல் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் 2020ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி இரவு வழக்கம் போல் தனது கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். பின்பு மறுநாள் காலையில் வந்து கடையை திறந்து பார்க்கும் பொழுது கடையில் வைத்திருந்த ரூ.1,02,000 பணத்தை காணவில்லை.

இதுகுறித்து செல்லதுரை தாழையூத்து காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் தாழையூத்து காவல் துறையினர் திருட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் செல்லத்துரை நடத்தி வரும் ஹோட்டலில் பணிபுரியும் மானூர், குறிச்சிகுளம், வடக்கு தெருவை சேர்ந்த சேக்மைதீன் (வயது 35) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்து. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட 3வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்,  இவ்வழக்கை விசாரித்த நீதிபதி விஜயராஜ்குமார், குற்றவாளி சேக்மைதீனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கில் திறம்பட விசாரணை செய்து சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வழக்கில் தொடர்புடைய நபருக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த தாழையூத்து உட்கோட்ட டி.எஸ்.பி. ரகுபதி ராஜா மற்றும் காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து