முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காசா மீதான தாக்குதலில் 400 பேர் பலி: இஸ்ரேல் அரசுக்கு பிரியங்கா கண்டனம்

வியாழக்கிழமை, 20 மார்ச் 2025      இந்தியா
Priyanka 2024-12-04

Source: provided

புதுடெல்லி: காசா மீதான தாக்குதலில் 400 பேர் பலியானார்கள் இதயடுத்து இஸ்ரேலில் செயலுக்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

இஸ்ரேலிய அரசாங்கத்தால் 130 குழந்தைகள் உள்பட 400 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பது அவர்களுக்கு மனிதநேயம் இல்லை என்பதை காட்டுகிறது. இது போன்ற செயல்கள் அவர்களின் உள்ளார்ந்த பலவீனத்தையும், உண்மையை எதிர்கொள்ள முடியாத இயலாமையையும் பிரதிபலிக்கின்றன. மேற்கத்திய சக்திகள் இதை அங்கீகரித்தாலும் சரி, பாலஸ்தீன மக்களின் இனப்படுகொலையில் தங்கள் கூட்டுறவை ஒப்புக் கொண்டாலும் அல்லது ஒப்புக்கொள்ளாவிட்டாலும் சரி, மனசாட்சி உள்ள உலகின் அனைத்து குடிமக்களும் இதைப் பார்க்கிறார்கள் என்பதை மறந்துவிட கூடாது. 

இஸ்ரேல் அரசு எந்த அளவுக்கு குற்றச் செயல்களில் ஈடுபடுகிறதோ, அந்த அளவுக்கு அவர்கள் தங்களைக் கோழைகளாக வெளிப்படுத்துகிறார்கள். மறுபுறம், பாலஸ்தீன மக்களின் துணிச்சல் மேலோங்குகிறது. அவர்கள் கற்பனை செய்ய முடியாத துன்பங்களைத் தாங்கிக் கொண்டாலும், அவர்களின் உள்ளம் நெகிழ்ச்சியுடனும், அசைக்க முடியாததாகவும் உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து