முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

38 வெளிநாட்டு பயணங்கள்: பிரதமா் மோடியின் அரசுமுறை பயண செலவு 259 கோடி ரூபாய்

வெள்ளிக்கிழமை, 21 மார்ச் 2025      இந்தியா
Modi 2024 11 20

Source: provided

டெல்லி : 2022-ம் ஆண்டு முதல் பிரதமா் மேற்கொண்ட அரசு பயணங்களுக்கு ரூ.259 கோடி செலவானதாக தகவல் வெளியாகி உள்ளது.

2022-ம் ஆண்டு மே முதல் கடந்த ஆண்டு டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் பிரதமா் மேற்கொண்ட அரசுப் பயணங்களுக்கான செலவின விவரங்கள், ஜொ்மனி முதல் குவைத் வரை 38 பயணங்கள் வாரியாக மத்திய அரசின் பதில் பட்டியலாக வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மொத்தமாக கிட்டத்தட்ட ரூ.259 கோடி செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செலவுகள் தங்குமிடம், இடத்துக்கான கட்டணம், பாதுகாப்பு, போக்குவரத்து, இதர செலவீனங்கள் என்ற அடிப்படையில் வகைப்படுத்தப் பட்டுள்ளன. அதன்படி, தங்குமிடத்துக்காக ரூ.104 கோடியும், இதர செலவுகளாக ரூ.75.7 கோடியும், போக்குவரத்துக்கு ரூ.71.7 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.

தனிப்பட்ட நாடுகளுக்கான செலவுகளாக அமெரிக்கா (ரூ.38.2 கோடி), ஜப்பான் (ரூ.33 கோடி), ஜெர்மனி (ரூ.23.9 கோடி), ரஷியா (ரூ.16.1 கோடி), பிரான்ஸ் (ரூ.15.7 கோடி), இத்தாலி (ரூ.14.4 கோடி) மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு (ரூ.12.7 கோடி) செலவிடப்பட்டுள்ளது. இந்த மூன்று ஆண்டுகாலத்தில் தனி நபருக்கான அதிகபட்ச செலவாக 2023 ஆம் ஆண்டு அமெரிக்க பயணத்துக்கு மட்டும் ரூ.22.89 கோடியும், குறைந்தபட்ச செலவாக நேபாள பயணத்துக்கு ரூ.80.01 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி 2022 ஆம் ஆண்டில் 8 நாடுகளுக்கும், 2023-ல் 10 நாடுகளுக்கும், 2024-ல் 16 நாடுகளுக்கும் அரசு முறைப் பயணமாக சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து