Idhayam Matrimony

தொகுதி மறுவரையறை ஆலோசனை கூட்டம்: பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி பங்கேற்பு

வெள்ளிக்கிழமை, 21 மார்ச் 2025      தமிழகம்
Pawan-Kalyan 2023-10-05

சென்னை, சென்னையில் இன்று நடைபெறும் தொகுதி மறுவரையறை கூட்டத்தில் ஜனசேனை கட்சி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொகுதி மறுவரையறை கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் சென்னையில் சனிக்கிழமை(மார்ச் 22-ஆம் தேதி) முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்க வருமாறு பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அவர்களுக்கு திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் அடங்கிய பிரதிநிதிகள் குழு நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறது. கடந்த மார்ச் 13-ஆம் தேதி தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையிலான குழு தில்லியில் தெலங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டியைச் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தது.

இந்த நிலையில் சென்னையில் இன்று நடைபெறும் தொகுதி மறுவரையறை கூட்டத்தில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனசேனை கட்சியின் மக்களவை உறுப்பினர் உதய் சீனிவாஸ் கட்சி சார்பில் கூட்டத்தில் கலந்துகொள்கிறார் எனக் கூறப்படுகிறது.

ஜனசேனை கட்சி பங்கேற்கும் நிலையில் தெலுங்கு தேசம் கட்சி இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளது. ஆந்திரத்தில் பாஜக கூட்டணியில் உள்ள ஜனசேனை கட்சி தொகுதி மறுவரையறை கூட்டத்தில் பங்கேற்கவிருப்பதாக வெளியான தகவல் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து